பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

சமுத்திரக் கதைகள்


இந்த மெளனிகளை தன்னால் மட்டுமே பேசவைக்க முடியும் என்ற பெருமிதத்தில் ‘மனித உரிமை” மகேந்திரன், மனிதாபிமானத்தின் அடிவாரத்திலிருந்து, அதன் உச்சத்தில் ஏறி நின்றுகொண்டு, தான் செய்யாதததை பிறரைச் செய்யச் சொன்னார்.

“மொதல்ல அவனை அவிழ்த்து விடுங்கய்யா...”

அப்படியும் கூட்டம் பேசாமல் நின்றபடியே, சந்தை இரைச்சலாய் முணுமுணுத்தபோது, அரசுக் குழுவின் மெய்க்காவலரான இன்ஸ்பெக்டர், கூட்டத்தினரை துப்பாக்கித் தனமாகப் பார்த்தபடியே மிரட்டினார்.

“அவிழ்த்து விடுறிங்களா? இல்ல... உங்களையும் இந்த கொடுமைக்கு உடந்தைன்னு அரெஸ்ட் செய்யனுமா?”

இப்போது கூட்டத்தினர் போட்டி போட்டபடியே, பன்னீரின் கட்டுக்களை அரும்பாடுபட்டு அகற்றினார்கள். ஒருவர், அவனின் வாயிலிருந்த ஸ்பாஞ்சை எடுக்கும் முயற்சியில், கடிபட்டக் கையோடு, அதை எடுத்து துரே எறிந்தார். இரண்டு சிறுவர்கள், ஈர்க்குச்சிகளை எடுத்து அவற்றை நினைவுச் சின்னம் போல் கையில் வைத்துக்கொண்டார்கள்.

இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதுபோல், இடம் பொருள் ஏவல் புரியாமல் கிடந்த பன்னீரை கூட்ட முகப்பினர் துக்கி நிறுத்தியபோது, இன்ஸ்பெக்டரும் குழு உறுப்பினர்களோடு பயந்து விலகினார். உடனே ஒரு தொள்ளைக் காது பாட்டி, பயப்படாதிக... யாரையும் எதுவும் செய்யமாட்டான். எல்லாத்தையும் தன்மேலேயே செய்துக்குவான். ஏதோ போதாத காலம். நீங்களாவது, இந்த பய மவனுக்கு எதாவது செய்யனும் என்றபோது -

பன்னீர், வாசலை நோக்கி பொடி நடையாய் நடந்தான். அவனைத் தடுத்தாட் கொள்ளப்போன இன்ஸ்பெக்டரிடம், கள ஆராய்ச்சியில் விருப்பமுள்ள மனநல டாக்டர் ராம் விவேக், அவனை, அவன் போக்கிலேயே விடுங்க. நான் பார்த்துக்கிறேன் என்றார்.