பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சமுத்திரக் கதைகள்


வேற ஆளப்பாருடா. எனக்கு உறவை விட ஊர்தாண்டா முக்கியம் பதினாறு பட்டியிலேயும் எங்க வெட்டாம்பட்டிதாண்டா உசத்தி.”

அந்த ஆடுதளத்திற்கு வேலியானது போல், மக்கள் கருவேல மரங்களும் புதர்களும் மண்டியது போல் மண்டி நின்றார்கள். கூட்டத்தில் ஒரு மல்வேட்டிக்கார விவேகி, தன்னைப் பார்த்த குழு உறுப்பினர்களுக்கு, முன்னுரையும் பின்னுரையுமாய் விளக்கமளித்தார்.

“எப்படி இருந்த பயல்... இப்படி ஆயிட்டான். பதிமூணு வயசிலேயே, பொதுக்காரியத்துல இறங்கினவன். அப்போ... எங்க ஊருக்கும் பக்கத்து சட்டாம்பட்டிக்கும் குளத்து தண்ணி தாவா, காவிரி நீர் விவகாரம் மாதிரி ஆயிட்டுது. இன்னும் கூடத் திரலை... இதோட, குளத்து மீனை பங்கு போடுறதலயும் பிரச்சினை. குளத்தங்கரையில, ரெண்டு ஊர்க்காரங்களும் அரிவாளும் கம்புமாய் சந்திச்சோம். அப்போ, எங்களோட வந்த இந்தப் பன்னீரு, சட்டாம்பட்டியைச் சேர்ந்த அப்பா கூட பிறந்த அத்த மகனோட தலையில கருங்கல்ல தூக்கிப்போட்டான். அந்த அளவுக்கு ஊர் அபிமானி. இப்போ என்னடான்னா... அய்யய்யோ... டேய்... டேய்...”

மல்வேட்டிக்காரர், காதலாகி கண்ணிர் மல்கி, பன்னிரைப் பிடிக்க ஒடியபோது, கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்டான எஸ்தர், தன்னை பெண்ணென்றும் பாராமல், அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். இன்ஸ்பெக்டர், “செத்தா போயிடுவான்...? கொஞ்சம் நேரம் சும்மா நில்லுவே...” என்று சொன்னபோதுதான், எஸ்தர் அவர் மீது போட்ட தனது பிடியை விட்டாள். மீண்டும் எல்லோரையும்போல், அவள் பார்வையும் பன்னீர்மேல் பட்டது.

இப்போது, பன்னிரின் ஆட்டமும் பாட்டமும் சுதி மாறின. அவனது இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று உதைத்துக் கொண்டன; மிதித்துக்கொண்டன. குத்துச்சண்டை வீரர்கள் போல், ஒன்றை ஒன்று பின்னிக் கொள்வதும், பின்னர் பிரிந்து, மின்னல் வேகத்தில் உதைத்துக் கொள்வதுமாய் சண்டையிட்டன. இத்தகைய கால்போரில், அவன், ஒற்றைக்கால் முக்கோணமாகத் தோன்றினான். இறுதியில் ஒரு காலை, இன்னொரு கால்