பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவரப் போதை

131


‘நாக்-அவுட் செய்யப்போனபோது, வாய் செயல்படத் துவங்கியதால், போரிடும் கால்களுக்கு ஒரு இடைவேளை கிடைத்தது. அவனது வாய், அந்த நேரத்தை தனதாக்கிக் கொண்டு, தனி ஆவர்த்தனமாகியது. எதிரே ஒரு சூன்ய வெளியை ஒரு மனிதனாய் உருவகப்படுத்திக் கொண்டு பேசியது.

“நீ அப்பாவிதான்... நல்லவன்தான்... இல்லங்கல... ஆனாலும், அடுத்த சாதிப் பயலாச்சே உன்னை வெட்டுனாத்தான், எங்க சாதிக்காரங்கள உங்க சாதிக்காரன் வெட்டுன பத்துபேர் கணக்க சரிசெய்ய முடியுண்டா. அதனால ஒன்ன விடமாட்டேண்டா... விடமாட்டேன். ஒன்ன மட்டுமில்ல, ஒன் சாதியையும் விடப்படாது. சொல்லிட்டார் சொல்லிட்டார். எங்கய்யா சொல்லிட்டார்.”

பன்னீர், சாதிப்பரணி பாடிப் பாடி ஆடியபோது, அதன் கோரம் தாங்கமுடியாது, முகம் திரும்பிய குழு உறுப்பினர்களைப் பார்த்தபடியே, ஒரு வெங்காய டப்பா பழைய நாட்டாண்மை பெருமிதமாகப் பேசியது.

“இவன் ரொம்ப மானஸ்தன். அதனாலேயே, ரொம்ப ரொம்ப சாதி அபிமானி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, பெருசா சாதிக்கலவரம் வந்தது பாருங்க... அப்போ, அதோ அரண்மனை வீட்டுத் தூக்குத் திண்ணையில நின்னு ஊசாட்டம் பாக்கானே ஈரத்துணி...”

“ஈரத்துணின்னா...?”

“ஈரத்துணியால கழுத்தை அறுக்கிறவன்னு அர்த்தம். அவனோட துண்டுதலுல, இந்த ஊருக்கு அடைக்கலமாய் தட்டு முட்டுச் சாமான் வாங்க வந்த எதிர்ச்சாதி வாலிபப்பையன் ஒருவனை ஒரே போடாய் போட்டவன் இந்தப் பன்னீர். இதனால, கொலை கேஸுல சிக்கி, கோர்ட்டு வழக்குன்னு அலைஞ்சி, அந்தப் புதுப்பணக்கார ஈரத்துணிக்காரன் கிட்டயே, கொஞ்சம் நஞ்சமிருந்த தன்னோட பங்கு நிலத்தை வித்துட்டு, ஒட்டாண்டியானவன். ஆனாலும், அப்போகூட இவனுக்கு புத்தி பிசகல. மூணு மாசத்துக்கு முன்னால வரைக்கும் எங்களை பைத்தியமாக்கிக்கிட்டு

6

ச. 10.