பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

சமுத்திரக் கதைகள்


விலாவாரியாய் விசாரிச்சிகளே?. நீங்க போன பிறகுதான், இவங்களுக்கு இருக்கு சேதி.”

‘உங்களுக்கு அவங்க ஈடா? போகட்டும். இந்த தலைப்பள்ளம்...?

“அதுவா...? பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தப்பட்ட கலவரத்துல கிடைச்சுது.”

“பிள்ளையார் ஊர்வலத்துக்கு ஆதரவான கலவரமா? எதிரான கலவரமா?”

“அதுதான் பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லீட்டேனே... சும்மா சும்மா நோண்டுனா எப்படி? பிள்ளையார் கிடக்கட்டும்... பூட்டை உடைச்சுட்டு அந்த வீட்டுக்குள்ள நீங்க எப்படிப் போகலாம்? நீங்க களவாளியா இருக்கமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?”

“இதோ இந்த இன்ஸ்பெக்டர்கிட்டேயே கேளுங்க.”

‘அடடே இன் ஸ்பெக்டரா...? நான் பார்க்கவே இல்லையே...”

“தலைவரே! இந்த கிண்டல்தானே வேண்டாம். அப்புறம், இந்தப் பயலைப்பற்றி ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க. நீங்க என்ன சொன்னாலும், நாங்க நம்புறோம்.”

“இதோ பாருங்க இன்ஸ்பெக்டர்! ஒங்க முகத்துக்காக இவங்கள விட்டு வைக்கேன். எங்க ஊரைப் பத்தியோ, இல்ல இவனப் பத்தியோ ஏதாவது தாறுமாறா சேதி வந்தா, நீங்கதான் பொறுப்பு. எங்களுக்கு சாதிக் கட்டு இருக்கு. பஞ்சாயத்து இருக்கு. விவரமான ஆட்கள் இருக்கு. எதுன்னாலும் நாங்க பார்த்துக்குவோம். எந்தப் பைத்தியத்தையும் எங்களால வைத்தியம் செய்யமுடியும். இத மீறி நீங்க எதாவது செய்தா அது சாதிக் கலவரமா வெடித்து நீங்கதான் சஸ்பெண்டு ஆவிங்க. சரி இன்ஸ்பெக்டர்! வந்ததுக்கு மிச்சமா அவங்கள வீட்டுக்குச் சாப்பிட கூட்டிவாங்க.”

போலீஸ் இன்ஸ்பெக்டர், பெட்டியில் இருந்து வெளிப்பட்ட பாம்புபோல் தொப்பியை கழட்டினார். அவர்கள் வந்துதான்