பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

141


“இன்றைக்கும் காரணவான் கிட்ட கேட்டுப் பார்க்கேன் அம்மச்சி

“பக்குவமாய் மோளே... பக்குவமாய்...”

தனித்துவிடப்பட்ட பாருக்குட்டி, கண்காட்டும் வலப்பக்கம் முதலாவது சுற்றில், அந்த வீட்டிலேயே மிகப்பெரிய கூடம் மாதிரியான அறையை வெறித்துப் பார்த்தாள். அவள் நினைவுகள் நிகழ்கால நிகழ்வுகளை துளைபோட்டு, கடந்தகால ஊற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தன.

அதே அறையில்தான், ஆறுமாதத்திற்கு முன்பு, ஒரு மங்கள இரவு வேளையில், அரிசி, நெல், தென்னம்பாளை, அம்பு, பித்தளைச் சட்டமிட்ட கண்ணாடி, கொழுந்து விட்டெரியும் கரி நெருப்பு, சின்னதோர் மரப் பெட்டியான செப்பு ஆகிய அஷ்ட மங்கலப் பொருட்களின் இருபக்கமும் அவள் மேற்கு நோக்கியும், மணமகனான சங்குண்ணி கிழக்கு நோக்கியும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராய் முதல்தடவையாக பார்த்துக் கொள்கிறர்கள். மணமகன், குத்து விளக்கை ஏற்றிவிட்டு மாப்பிள்ளைத் தோழனிடம் உள்ள பட்டு, பீதாம்பர முண்டுகளையும், துண்டுகளையும் வாங்கி, நாணிக்கோணிய பாருக்குட்டியின் கையில் திணிக்கிறான். உடனே உற்றார், உறவினர் இருவர் மீதும் மங்கள அரிசிகளை தூவி முடிக்க, முண்டு கொடுத்து ஏற்பட்ட சம்பந்தம் நிறைவு பெறுகிறது.

மூன்று நாழிகைக்குள் அந்த சம்பந்த அறையே, சம்போக அறையாக மாற்றப்படுகிறது. அந்நிய ஆண்வாடை அறியாத பாருக்குட்டி, முதலில் முரண்டு பிடிக்கிறாள். சிறிது நேரத்தில், காய்ந்த மாடு கம்மாவிற்கு போன கதையாகிறாள்.

மறுநாள் மாத்தாண்டத்தில் உள்ள மாப்பிள்ளை தறவாட்டில் மறுஇரவு. அது முடிந்ததும், அன்றே பிறந்த வீட்டிற்கு திரும்பிய இவளை, ஒருமாதம் கழித்து “சம்பந்தக்கார” தறவாட்டு “அம்மாயி மங்கலப் பெண்களோடு வந்து மார்த்தாண்ட தறவாட்டிற்கு அழைத்துப் போகிறாள். ஆர்த்தி வரவேற்போடு, நாழி அரிசி, ஊதுபத்தி, வாழைப்பழ படையலுக்கு முன்னால்