பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

சமுத்திரக் கதைகள்


பிடரியை கோதிவிடுகிறாள். காரணவானுக்கு அருகே சரிநிகர் சாமானமாக, அதே சமயம் ஒரு முக்காலியில் ஒரு மினுக்கான மனிதர் உட்கார்ந்திருக்கிறார். கடுக்கன், நேரியல், இரட்டைமடிப்பு வேட்டி வகையறாக்களைக் கொண்டவர். காரணவானின் காலடிப் பக்கம் ஒரு பலாப்பலகையில் ஒலைக்கரணம். மடித்துப் போட்ட கால்களை சதைப்பலகையாக்கி, இடது கை, பனையோலை சுவடியை பிடித்திருக்க, மாட்டுக் கொம்பு பிடிகொண்ட எழுத்தாணியால், வாய்க்குள் வார்த்தைகளை பிரசவித்தபடியே எழுதுகிறார். பார்ப்பதற்கு எழுத்தாணி நகர்வதுபோல் தோன்றினாலும், ஒலைதான் நகர்கிறது. அருகே இரண்டு சுமார் மனிதர்கள். சிறிது தொலைவில் கைகட்டி, வாய்புதைத்து நிற்கும் காவலாளிகளும், ஏவலாளிகளும். அவர்கள் இளக்காரத் தோற்றமாய் நின்றாலும், சில கைகள் வேல்கம்புகளை பிடித்திருந்தன. சில ஈட்டிகளை பற்றியிருந்தன. இந்த ஆயுதங்கள் அந்த இளக்காரத்தையே கம்பீரப்படுத்தின.

இதற்குள் ஒலைக்கர்ணம், தான் எழுதி முடித்த ஒலைச்சுவடி அடுக்கின் முனையில் மேலும் கீழுமாய் இரு துவாரங்களைப் போட்டு, அவற்றுக்குள் செப்புக் காசுகள் கட்டப்பட்ட கயிறுகளை விட்டு, பின்பக்கமாய் இழுத்து கட்டிமுடித்துவிட்டு, காரணவானையும், அந்த மினுக்கு மனிதரையும் மாறிமாறி பார்த்தபடியே, ஒலையை வாசித்தார். அந்த வாசிப்பு வரிகளுக்கு காற்புள்ளி, அரைபுள்ளிபோல் இருவரையும் அவ்வப்போது மாறிமாறி பார்த்துக் கொண்டே வாசித்தார்.

“நாஞ்சில் நாட்டு தாமரைக்குளம் கணக்கு ஆறுமுகப் பெருமாள் உள்ளிட்டாருக்கு, ஆரைவாய் மொழியில் பார்வதிக்காரர் நந்திஸ்வரன், பறையடிமை விலையோலை எழுதிக் கொடுத்த கரணமாவது.”

“நாங்கள் குருபரமுடை யோராக ஆண்டு அனுபவித்து வருகிற ஆரைவாய் மொழி ஸ்ரீபால பொய்கை புறஞ்சேரியில் கிடக்கும் திண்டாதாரில் பறை இசக்கிமாடத்தியை, சனம் நாலும் விலை கொள்வாருளதோ, கொள்வாருளதோ என்று நாங்கள் முற்கூற, விலை கொள்வோம் என்று இவர்பிற்கூறி எம்மிலிசைந்து,