பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

145


எதிர் மொழி மொழிந்து, மறுமொழி கேட்டு உறுமொழி பேசி தம்மில் பொருத்தி ஆரைவாய்மொழி மன்றருகில் நிறுத்தி நால்வர்கூடி நடுவர் மூலமாக விலை நிச்சயித்த அன்றாடகம் வழங்கும் நெல்மேனி கலியுக ராமன் பணம் நாற்பது... இப்பணம் நாற்பதுக்கும் விலையாவணக்களத்தை காட்டி பெற்று கை செலவாக கொண்டு விலையற விற்று பொருளறப்பற்றி விற்று விலைப்பிரமாணம் செய்து கொடுத்தோம். இது விலையோலை ஆவதாகவும், இதுவல்லது வேறு விலையாவன பொருளாவன சிலாவன, பொருள் மாண்டறுதிபொருள் செலவு ஒலை கரணமும் காட்டவும் கடவதன்றியென ஒரு காலாவது இருகாலாவது முக்காலாவது, ஒலைக்குற்றம், எழுத்துக்குற்றம் சொல் குற்றம், பொருள் குற்றம் வெட்டுச்செருக்கு, வரிமாறாட்டம், வரி நுழைந்தெழுதல் வாசகப்பிழை, மறு எக்குற்றமும் குற்றமின்றி வியாபித்து விலைப் பிரமாணம் செய்து கொடுத்தோம். பார்வதிக்காரர் நந்திஸ்வரன் உள்ளிட்டார். இதற்கு சாட்சி இராமலிங்க நல்ல சிவன் (ஒப்பு) தானுவன் பிச்சையாண்டி (ஒப்பு) இப்படி இவர்கள் சொல்ல இந்த பறையடிமை ஒலைக்கரணம் நடுவெழுதின ஆரைவாய்மொழி தேசம் ஊர்கணக்கு வன்னியப்பெருமாள் நந்திஸ்வரன் (ஒப்பு)”

அந்த ஒலைவாசிப்பு கிளப்பிய ஒலிஅலைகள், அதிர்ச்சி அலைகளாகி, பாருக்குட்டியின் காதுகளில் மோதின. ஒவ்வொரு வரியும், வார்த்தை, வார்த்தையாய் குத்தியது. அந்த ஒலைக்கட்டில் உள்ளடங்கிய அத்தனை உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் ஒற்றை ஆயுத எழுத்தாகி, அவளை கூறுபோட்டது. விலைபோன இசக்கி புரசமாடத்தியை அவள் அறிவாள். அந்த தறவாடு கோலோச்சும் அடிமைகளில் மின்னும் கருப்பி. வீட்டில் கொல்லைப்புற முனையில் படிக்கட்டுகள் கிழ்நோக்கி இட்டுச் செல்லும் தறவாட்டு குளத்தை அடுத்துள்ள முக்கனி மரங்களோடு, பனையும், தென்னையும் இடையிடையே கொன்றையும், தேக்கும் ஊடுபயிராக காணமும் விளையும் தோப்புக்காட்டின் மறுமுனையில் மூன்றடி உயர, இரண்டரையடி அகல குடிசைகள் ஒன்றில் வசிப்பவள். பாருக்குட்டியை, அந்தத் தோப்பில் பார்க்கும்போதெல்லாம், வீட்டுக்காரனான புலைமாடனை