பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

சமுத்திரக் கதைகள்


அதட்டி, உருட்டி, அந்தப் பக்கமாய் கொண்டுவந்து, ஒரு தென்னை மரத்தில் தாவவிடுகிறவள். இரண்டு இளம் தேங்காய்கள் உதிர்ந்ததும், அவற்றை அரிவாளால் கும்பங்களாய் செதுக்கி, அவற்றின் முனைகளை உடைத்து சிறிது தொலைவில் உள்ள கமலைக்கல்லில் வைத்துவிட்டு, ஒரு தென்னை மரத்திற்கு பின்னால் மறைந்தபடியே கூவுகிறவள். தேங்காமோ... தேங்காமோ

இப்படிப்பட்ட இசக்கி மாடத்தி, இப்போது விலைபோகிறாள். ஒருவேளை அவள் தன்மீது கொண்ட தனியன்பே அவளை கணவனிடம் இருந்தும், குழந்தைகளிடம் இருந்தும் நிரந்தரமாய் பிரித்து, கண்காணா இடத்திற்கு திவாந்தரமாய் போகவேண்டிய கட்டாய அபாயத்தை கொடுத்திருக்கலாம். அம்மாயி என்பவளின் குடும்ப சதுரங்கத்தில் இந்த அப்பாவியும் ஒரு பகடைக்காயாகி விட்டாள்.

பாருக்குட்டி, அடங்காச் சினத்திற்கு ஆட்பட்டாள். அப்படி ஆட்பட ஆட்பட அவளை பெரும்பாலும் இன்பமயமாயும், இடையிடைய துன்பமயமாயும் ஆட்டிவைத்த சங்குண்ணி காணாமல் போய்விட்டான். காரணவான், தறவாடு, அம்மாயி, அம்மா, உற்றார், உறவினர் அத்தனைபேரும், அத்தனையும் காணாமல் போனார்கள். போயின. அவளுக்கு, தான் என்பதும் நினைவற்றுப் போனது. அவள் உடல், பொருள், ஆவி அனைத்திலும் இசக்கி மாடத்தி ஒருத்தியே வியாபித்து நின்றாள்.

பாருக்குட்டி, அந்தக் கும்பல் பக்கம் சென்றாள். மூத்த தாய்மாமனான காரணவானுக்கு மரியாதை தெரிவிக்கும் சம்பிரதாய உணர்வில்லாமல், மார்பு துணியை விலக்கிக் கொள்ளாமலே, அவரை நேருக்கு நேராய் பார்க்கப் போனாள். அவர் போட்ட எதிர் பார்வையில் அப்படி பார்க்க முடியாமல், அம்மாயியைப் பார்த்து கேட்டாள்.

அம்மாயி! நம்மோட அடிமையை அந்நியருக்கு விற்கிற அளவுக்கு நாம செல்வத்தில குறைஞ்சு போகல, அதோட ஒரு பெண்ண அதிலயும் ஒரு இளம் பெண்ண அவள் குடும்பத்தில்