பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

147


இருந்து பிய்த்து எறிவது மகாபாவம். இந்த பாவத்தை இப்போ நாம நிறுத்தா விட்டால், “நாமே அடுத்த ஜென்மத்துல அடிமையா பிறப்போம்”.

பாருக்குட்டி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், எப்படியோ பேசி, காரணவான் முகத்தை கூம்ப வைத்து விட்டாள். அம்மாயிகாரியின் உதடுகளை துடிக்கச் செய்துவிட்டாள். காரணவான் அவளிடம் பேசுவதை தனது தகுதிக்கு கீழான காரியமாக நினைத்து சொல்லிக்கொடு... கிள்ளிவிடு. இல்லாட்டி தள்ளிவிடு என்ற பழமொழியான சாஸ்திர வார்த்தைாகளை வாயிலி ருந்து கீழே உதிர்த்துப் போட்டார். பிறகு, அவள் முன்னால் தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் மினுக்கு மனிதரைப் பார்த்து அங்கே போய், இசக்கி மாடத்திய இழுத்துட்டுப் போகலாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் மாயாவிடோல் மறைந்து போனார். அம்மாயியும் பாருக்குட்டியை கண்களால் எரித்து அவளைக் கடித்துத் தின்பதுபோல் நாக்கை நீட்டி, கணவர் பின்னால் ஓடினாள்.

ஆண்டையான ஆறுமுகப்பெருமாள், ஒலைக்கர்ணம், ஊர்க்கர்ணம், ஆகியோர் ஏவலாளிகளோடு கொல்லைப் பக்கமாய் போனார்கள். முன்னவர் மூவரும் தோப்புக்குள் நின்றபோது, ஏவலாளிகள் சேறும் சகதியுமான அந்த குடிசை மண்டிக்குள் மூன்றாவது குடிசை முன்னால் போய் நின்றார்கள்.

ஒரு முண்டாணி நாழிகைகளுக்குள், அந்தக் குடிசையே அங்குமிங்குமாய் ஆடியது. அதன் உச்சி குலுங்கியது. இந்த குலுக்கலுக்கு, ஏற்பட்ட கூக்குரல், தொலைவில் உள்ள பாருக்குட்டியை உறைய வைக்கிறது. சிறிது நேரத்தில் இசக்கி மாடத்தி, உச்சிமுடி இழுக்கப்பட்டு குடிசைக்கு வெளியே கொண்டுவரப் படுகிறாள். பிள்ளை குட்டிகள், ஏவலாளிகளின் கால்களை கட்டிக் கொள்கின்றன. கணவன் புலைமாடன், அவர்கள் முன்னால் படுத்து பாம்புபோல் தலைநிமிர்த்தி கையெடுத்து கும்பிடுகிறான். அவர்களோ, இசக்கி மாடத்தியின் கால்கள், அவன் தலையில் மோதும்படி, அவளை இழுக்கிறார்கள். இழுத்து அடிக்கிறார்கள். வழிமறிக்கும் பிள்ளைகளை

. . . .

ச. 11