பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

சமுத்திரக் கதைகள்


கணுக்கள் புடைத்த மூங்கில் தடிகளால் குத்துகிறார்கள். அக்கம்பக்கத்துக்கு குடிசைக்கார அடிமைகள், இத்தகைய அமங்கலத்திற்கு பழக்கப்பட்டுப் போனதால் வாயடைத்து, காதைடைத்து நிற்கிறார்கள். பூமத்தியரேகை போல் கற்பிதமான ஒரு அடிமைச்சங்கிலியை அவர்களால் உடைக்க முடியாமல் உழல்கிறார்கள்.

இந்த அவலத்தையும், ஒலத்தையும் காணச் சகிக்காததுபோல், நெற்றி திருநீர் மேல் வைக்கப்பட்ட மஞ்சள் குங்குமமாய் ஒளிர்ந்த அந்திமச் சூரியன், தாடகமலைக்குள் ஜீவ சமாதியாகிறது. பாருக்குட்டி, தறவாட்டின் தென்மேற்கு மூலையில் புதர்மண்டிய நாகராஜா சிலைகளை கொண்ட தனிக்கோவி லான சித்திரக்கூடத்திற்கு முன்னால் ஓடிப்போய் விழுந்து விழுந்து கும்பிடுகிறாள். மறுபடியும் எழுந்து நின்ற இடத்திற்கு தாவுகிறாள். தோப்புப்பக்கம் வேகவேகமாய் நடக்கிறாள். நடந்தவேகத்திலேயே திரும்புகிறாள். தறவாட்டிற்குள் முயலாய் ஓடி, ஆமையாய் திரும்புகிறாள்.

அதற்குள், இசக்கிமாடத்தி இழுத்து வரப்படுகிறாள். அவள் முடியே மூக்காணங்கயிறாகி ஒருவனின் கைப்பிடிக்குள் அடங்குகிறது. வைரப்பட்ட நிலக்கரித் துண்டம் ஒன்று கைகால் முளைத்து பெண்ணுரு பெற்றது போன்ற அவள் உடம்பின் ஒவ்வொரு அங்கங்களையும் ஒவ்வொருத்தன் பிடித்துக் கொள்கிறான். முரண்டு பிடிப்பவளை ஒருவன் மூங்கில்தடியால் மாறிமாறி அடிக்கிறான். இன்னொருத்தன், சாட்டைக்கம்பால் முன்னாலும், பின்னாலும் இடிக்கிறான். ஆறுமுகப் பெருமாள் அதை அங்கிகரிப்பதுபோல், மேலும் கிழுமாய் தலையாட்டுகிறார். இசக்கி மாடத்தியோ ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு துள்ளலாய் குதிக்கிறாள். ஒவ்வொரு புலம்பலாய் வெளிப்படுத்துக்கிறாள்.

இறுதியில், புதிய ஏமான் எதிர்பார்த்ததுபோல, அடிபட்ட மாடாய் படிகிறாள். அவைைள நோக்கி அலறியடித்து ஓடிவரும் புலைமாடனையும், நாலைந்து சிறுவர் சிறுமிகளையும் நோக்கி, இருவர் ஈட்டிகளோடு ஒடுகிறார்கள். அவர்கள், ஈட்டியைப் பார்த்து