பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

151


அதுவே முதல் தடவை. கண்முன்னால் நடக்கும் கொடுரத்தை அவளால் காணச் சகிக்கவில்லை.

பாருக்குட்டி ஆவேசியாகி, சித்திரக் கூடப் பக்கமாய் ஓடி திற்கிறாள். உள்ளே ஊடுருவி அங்குள்ள நாகச்சிலைகளை தூக்கி குளத்தில் போட நினைக்கிறாள். அப்போது

கட்டுக்கடங்காத காது தாங்காத பிளிறல். “ஏய்... ஏய்...” என்ற எமக்கத்தல். பூமியை, மலை இடிப்பதுப் போன்ற சத்தம். நிமிர்ந்து திரும்பிய பாருக்குட்டியை ஒரு இரும்புக்கரம், கழுத்தோடு சேர்த்து தனது கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு, அவளுக்கும் சேர்த்து கத்துகிறது. அந்த தறவாட்டையே குலுக்கும்படியான பூகம்பக் கத்தல். அந்தக் கத்தல் புறப்பட்ட தொண்டை எரிமலையாகிறது. நாக்கு எரிஈட்டியாகிறது. பிடி இறுகிக் கொண்டே போகிறது.

அந்த அதிரடி குரல்கேட்டு தறவாட்டில் உள்ள அத்தனைபேரும் அலறியடித்து ஓடி வருகிறார்கள். “விருந்தாளி சம்பந்தக்கார கணவர்களோடு தனித்தனி அறைகளில் உறவாடிக் கொண்டிருந்த சகோதரிகள், அரைகுறை உடம்பை பொருட்படுத்தாது அங்கே குவி கிறார்கள். காரண வானும், அம்மாயியும் பனைமட்டையில் ஒடுங்கிக் கட்டப்பட்ட பனையோலையில் நெருப்பேற்றிய ‘சூட்டுத்தியோடு வெளிப்படுகிறார்கள். பாருக்குட்டியின் அம்மாவான குஞ்சம்மா மகளை அந்த பிடிக் கோலத்தில் பார்த்தவுடனேயே, கிழே விழுகிறாள். இருக்காளோ செத்தாளோ... அவள் மகள்களும் சகோதரிகளும், பாருக்குட்டிக்கு அழுவதா, அவளுக்கு அழுவதா என்று புரியாமல் மாறிமாறி இருவரையும் பார்த்துப் பார்த்து திரும்பி திரும்பி அழுகிறார்கள். ஆசையைப் போல் துக்கத்திற்கும் வெட்கமில்லை. அந்தப் பெண்கள் வெட்கம் விட்டு, உடலெல்லாம் வீபரித வெளிப்பாடுகளாக மாரடிக்கிறார்கள். விசித்திர உயிரினங்கள்போல் விநோதமாக குரலிடுகிறார்கள்.

இதற்குள், அக்கம் பக்கத்து தறவாட்டுக்காரர்கள் திப்பந்தங்களோடு கூடுகிறார்கள். குருசடி மலைக்குன்றில் குண்ட்டிப் டட்டு மரித்த தேவசகாயம் பிள்ளையின் நினைவால் உள்ள சிலுவை