பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடசாமியின் ஊர்வலம்

161


சொன்னபோது, கடைக்காரர், அவரது அறியாமையை, தன் குவாலிபிகேஷனாக நினைத்தவர்போல், பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டார். ‘நமக்கு விபரம் தெரியலியே’ என்ற மனோ பாவத்தைக் காட்டும் தாழ்வு மனப்பான்மையுடனும், விபரம் தெரியத் துடிப்பவர் என்ற உணர்வை பிரதிபலிக்கும் குரு பக்தியுடனும், மாடசாமி, அவரை நோக்கினார்.

கடைக்காரர், அவருக்கு ஞான ஸ்நானம் கொடுக்கத் திர்மானித்தவர்போல் “பேப்பர் படிக்கிறதுக்கு விவரம் தெரியணும்பா... உதாரணமா... நடிகை நந்தகுமாரி ஏன் கல்யாணம் பண்ணிக்கலன்னு எழுதி இருக்கு... பாரு... அதில் ஒரு மர்மம் இருக்கு” என்றார்.

“அதுல... அப்படி என்ன மர்மம் இருக்கு அண்ணாச்சி”

அது பெரிய கதை... இந்த நந்தகுமாரியும், நடிகர் நாயகமும் ஏடாகூடமாய் நடந்துக்கிறதாயும். ரகசியமாய் கல்யாணம் பண்ணிக்கிட்டதாயும் கிண்கிணிப் பத்திரிகையுல கிசுகிசுப் பகுதியில் போட்டிருந்தாங்க... அதை, இவள், இதுல மறுத்து எழுதியிருக்காள்... எதுக்கும் நாளைக்கு ஆந்தையின் கேள்வி பதிலப் படிச்சா மர்மம் தெரியும்.:

“குதிரை ஓடுதுன்னு போட்டிருக்கே... அப்படின்னா... என்ன அண்ணாச்சி...?

“நல்ல ஆளுப்பா... நீ. குதிரை பந்தயத்தைப் பத்தி உனக்கு தெரியாதா... நீ போனதே இல்லியா”

“நீங்க சொல்றது புரியல”

“புரியுறதுக்கு மூளை வேணும்பா... எவ்வளவு நாளைக்கு பட்டிக்காட்டானாய் இருக்கப்போற...? மெட்ராஸுக்கு வந்து ஒரு வருஷமாயிட்டு என்கிறே... இன்னும் குதிரைப் பந்தயத்தைப் பத்தி தெரியாதுங்றியே...”

“நான் மூடன்தான்... ஒத்துக்கிறேன்... அதுக்காக... நீங்க இந்த விஷயத்த மூடி மறைக்கப் படாது..."