பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

சமுத்திரக் கதைகள்


“கிண்டி இருக்குல்லா... அதுல பெரிய மைதானம் இருக்கு... அங்க, பலநாட்டு குதிரைங்க வரும். அதுல கில்லாடி ஆளுங்க ஜாக்கியா இருப்பாங்க... குதிரைங்கள ஓட்டப் பந்தயமா ஒட்டுவாங்க... எந்த குதிரை முதல்ல வருதுன்னு நாம பணம் கட்டணும். பத்து கட்டுன்னா நூறு. நூறு கட்டுன்னா பத்தாயிரம்”

“பத்தாயிரம் கட்டுனா... நூறும் வருமுல்லா”

“அதுலதான் அறிவு வேல செய்யணும்... இதப்பாரு... இந்த ரேஸ் டிப்ஸ்ஸ படிச்சு... இதுப்படி பணம் கட்டுனா... குறைஞ்சது... இரண்டு மடங்கு வருமானம் இருக்கும்... வாரீயா... வார ஞாயிற்றுக்கிழமை போவோம்....”

“நமக்கெதுக்கு வம்பு”

“பைத்தியக்கார ஆளுய்யா. நீ, ராப்பகலா சைக்கிள் மிதிச்சி என்னத்தக் கண்டே? ஒரே வாரத்துல லட்சம் சம்பாதிக்கலாம். ஒரு பெரிய கடலமிட்டாய் பாக்டெரியேகூட வைக்கலாம்... என்ன சொல்ற..?” வாரியா

“நாளைக்குச் சொல்றேன்”

‘இப்ப ரெண்டுல... ஒண்ணச் சொல்லிடு. இல்லன்னா... வேறே ஆள கூட்டிக் கிட்டு போவேன். ரெண்டுபேர்ல ஒருவனுக்காவது அதிர்ஷ்டம் இருந்து... அந்த அதிர்ஷ்டத்தில் அடிக்கும்...”

“பணம் போயிட்டுதுன்னா”

“அது எப்படிய்யா போவும்... இந்த பத்திரிகையில கொடுக்கிற டிப்ஸ்படி கட்டிப்பாரு... இது... ஏழை ஜனங்களோட பத்திரிகை

ஏழைங்களுக்கு நஷ்டம் வரும் படியா... எழுதுவாங்களா...? நேத்தைய பேப்பர் இது... நல்லாபாரு... ரிக்ஷாக்காரருக்கும்

முடிதிருத்துபவருக்கும் ஜாக்பாட் விழுந்திருக்கு... தினமுத்தி பத்திரிகை

கொடுத்த டிப்ஸ்படி ஆடுனவர்கள்... “ஐந்து லட்சம் அபேவு.”

“அடடா... அதிர்ஷ்டமுன்னா... இதுல்லா அதிர்ஷ்டம்.” “அதிர்ஷ்டமில்லையா... இந்த பத்திரிகையோட அறிவு வேல

செய்திருக்கு. சரி, வரியா ஞாயித்துக்கிழம."