பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடசாமியின் ஊர்வலம்

165


ரூபாய் கட்டினார். அவர் கெட்டகாலம், அன்று அவனுக்கு நூறு ரூபாய் கிடைத்தது. அடுத்த வாராம் கோவிந்தா. மறுவாராம் 50 ரூபாய்.

மாடசாமி ஒரு லட்சியவாதி. எடுத்த காரியத்தை கண்ணுங் கருத்துமாக முடிப்பவர். ஆகையால் கிண்டியில் லட்சம் ரூபாயாவது (குறைந்தபட்சம்) சம்பாதித்து, ஒரு சினிமாப்படம் எடுப்பது என்று திர்மானித்தார். மக்கள் பத்திரிகையின் சினிமாச் சங்கதிகளைப் படித்தபிறகு, தானே அதில் கதாநாயகனாக நடிக்கலாம் என்றும் யோசிக்கத் துவங்கினார்.

அப்பாவின் நடமாட்டத்தில், பெரிய மாறுதல் ஏற்பட்டிருப்பதை, மகள் சினியம்மை முதலில் அவ்வளவாகக் கவனிக்கவுமில்லை. கண்டு கொள்ளவும் இல்லை. தந்தை வாங்கிப் போட்ட மக்கள் பத்திரிகையை, அவள் விழுந்து விழுந்து படித்தாள். பக்கத்து வீட்டுப் பெண்களோடு (இப்போதைக்கு) அவள் பார்த்த சினிமாக்களையும், வாரப் பத்திரிகைகளையும், ருசிகரமான காதல் கதைகளையும், எட்டாப்பு தமிழ் அறிவின் உதவியோடு படித்துக் கொண்டும், பெரிது... பெரிது காதல் பெரிது... அதனினும் பெரிது ஒடிப்போவது என்ற ஜனரஞ்சகக் கவிஞரின் சினிமாப் பாட்டையும் முணுமுணுத்துக் கொண்டு, அவள் கனவுலகில் சஞ்சரித்தாள்.

மாடசாமியின் மகன் பத்தாவது வகுப்பு துரைராசுக்கு, அப்பா வாங்கி வந்த அந்த பத்திரிகை ஒரு அரும்பெரும் பொக்கிஷமாகத் தெரிந்தது. இதுவரைக்கும் அவன் முட்டாள். இனிமேல் அப்படி இல்லை. இதுவரை, பள்ளிக்கூடத்துப் பையன்கள் பேசிய “பாபி”, “கோபி” முதலிய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல், தனிமைப்பட்டு நின்றான். காதலே வா ரீலி ஸ்... “கவர்ச்சியே காதல் ரீலிஸ்” என்று சகமாணவர்கள் பேசும்போது, அவர்களின் ஜெனரல் நாலட்ஜை கண்டு வியந்து நின்றான். வாத்தியாரிடம் மாணவர்கள் “ஸ்ார்... நாயகம் நடித்த லேட்டஸ்ட் படத்தைப் பாத்திங்களா” என்று கேட்பதும், அதற்கு வாத்தியார் நீங்க பாத்துட்டு வாங்கடா. நல்லா இருந்தா, நான் போறேன்” என்று பதில் சொல்வதும், அவனுக்கு திகைப்பைக்