பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடசாமியின் ஊர்வலம்

167


அவனுக்குத் தெரியாதுதான். ஆனால், பிரபல வாரப் பத்திரிகைகளைப் படித்து, எந்த நடிகை எப்படி மெலிந்தாள் எவள் சமீபத்தில் தடித்தாள் என்பது மட்டுமில்லாமல், ஒரு சினிமா பத்திரிகையைப் படித்தன் மூலம், அவனுக்கு ஒரு நடிகையின் அங்கங்கள் அனத்தையுமே நேரில் பார்த்ததுபோல் தோன்றியது.

இப்போது துரைராசுக்கு, தாழ்வு மனப்பான்மை போய்விட்டது. மாணவர்கள் மத்தியில், அவன் ஒரு குருப் லீடர். புடில்யன், ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் எழுதிய சரித்திரக் கதையில் “அவள் தோளில் இருந்த அவன் குறும்புக்கை, அதற்குக் கீழே சென்று விளையாடியது” என்ற வர்ணனையை, குறைந்தது இருபது தடவை படித்திருப்பான். நடிகை நந்தகுமாரியின் தோளில் அவன் கை இருப்பது போலவும், பிறகு எழுத்தாளர் புடில்யன் சொன்னபடி, நடப்பது போலவும். இருபத்தைந்து தடவை நினைத்திருப்பான்.

சினியம்மையும், சளைக்காமல் பத்திரிகைகளில் வரும் ஒரு கவர்ச்சிகரமான சினிமாப் பதிலை ரசித்துப் படிப்பாள்; அவளுக்கு, தான், நடிகை நந்தகுமாரி என்ற நினைப்பு. அக்காளுக்கும். தம்பிக்கும் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

“நடிகை நந்தகுமாரி ஜம்முன்னு இருக்கா பாரேன்”

“நடிகர் வெண்சாமரனும் ஜம்முன்னு இருக்கார். அவனைக் கட்டிடுறவள் கொடுத்து வைச்சவள்”

துரதிருஷ்டம் என்னவென்றால் நடிகர், நடிகைகள் கொடுத்து வைத்ததுமாதிரி, சினியம்மைக்கும், துரைராசுக்கும் ஒரு காலம் வரும் என்று அவர்களே நினைத்துக் கொண்டதுதான்.

மாடசாமியும், இப்போது பிஸ்ஸி அந்த மக்கள் பத்திரிகையில் வெளியாகும் ‘டிப்ஸ்படி ஆடத் துவங்கினார். கடைக்காரர் உதவியில்லாமல், சுயேச்சையாக குதிரையை நடத்தும் அளவிற்கு முன்னேறி விட்டார். இதனால், வயது வந்த மகளை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. இதற்காக சினியம்மையும்