பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடசாமியின் ஊர்வலம்

169


என்றாலும், துரை ராசுக்கு வாழ்க்கை கசக்கத் துவங்கியது போல் தெரிந்தது. அவன் அப்பா வீ ட்டைச் சரியாக கவனிக்காததாலும், முன்போல் காசு கொடுக்காததாலும், ஒரு சினிமாவை ஒரு தடவைக்கு மேல் அவனால் பார்க்க முடியவில்லை. இதனால், ஆசிரியர்களின் ஜெனரல் நாலேஜ் கேள்விகளுக்கு அவனால் முன்மாதிரி பதிலளிக்க முடியவில்லை. அப்பாவிடம் “பூட்சுக்கு கேட்டால், அவர், எவனோ கழட்டிப் போட்ட, பழைய பூட்ஸை கொண்டுவந்து கொடுத்தார். துரைராசுக்கு அழுகை வந்தது, போதாக்குறைக்கு, நடிகை நந்தகுமாரி... அவனின் கனவுக் கன்னி ஒரு சேட்டை, கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்...

துரைராசின் மீது இன்னொரு அடி விழுந்தது. ஒருநாள் மாடசாமியிடம்: ‘பரீட்சைக்கு பீஸ் கட்டணும்” என்று கேட்டான். (அன்று ஒரு புதுப்படம் ரிலீஸ் அருமையான பாபி பாணிக்கதை) கிண்டியில் காசை விட்டுவிட்டு, நொண்டிக் குதிரை மாதிரி வீட்டுக்கு வந்து சேர்ந்த மாடசாமிக்கு, இந்தக் கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரீட்சைக்கு பீஸ் கட்டணுமாமே! ‘என்ன அக்கிரமம்! அந்த பணத்தில் ஒரு குதிரையை வைத்தால் ஜாக்பாட்டே விழலாம்! இவன் எதுக்குப் படிக்கனும்? வேலைக்குப் போனால் என்ன? வேலைக்குப் போயி ஒரு நூறு கொண்டு வந்தா, ஹைதராபாத்திலாவது ஜெயிக்கலாம்.

மாடசாமி உள்ளே நினைத்ததை வெளியே கத்தினார்.

“நீ படிச்சி கிழிச்சது போதும். நொண்டிக் குதிரை எப்படி ஒட முடியாதோ... அப்படி ஏழைங்க படிக்க முடியாது... பேசாம ஒரு வேலையைப் பாரு”

துரைராசு அழுதே விட்டான். ஏல ஒன்பது மணிகூட ஆகல... அதுகுள்ள தூக்கம் வருதா... பத்து மணிவரைக்கும் படிக்கலன்னா முதுகுத் தோலை உரிச்சிடுவேன்” என்று சொன்ன அந்த அப்பவா, இந்த அப்பா?