பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

சமுத்திரக் கதைகள்


துரைராசு, “காதல் கசக்குமா” என்ற சினிமாப் படத்தில கதாநாயகன் கஷ்டம் தாங்காமல் அழுவதை நினைத்துக் கொண்டான். நந்தகுமாரி, கதாநாயகனுக்கு அனுதாபப்பட்டது மாதிரி, அவளின் சாயல் கொண்ட பக்கத்து வீட்டுப்பெண், தனக்கு அனுதாபப்படுவாள் என்று கற்பனை செய்து கொண்டான். அவள் கண்ணில் விழும்படியாக நின்று கொண்டு, முகத்தை ஒரு மாதிரியாய் வைத்துக் கொண்டான். இதற்காக, அப்பா தன்னை இன்னும் அதிகமாகக் கொடுமைப்படுத்தினால் கூட தேவலை என்று நினைத்தான். ஆனால் பக்கத்து வீட்டுப் பெண், இவனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. “பார்த்தும் பார்க்காத பாவனையே காதல் என்று பத்மா கிருபாகரன் ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் எழுதியதை நெஞ்சில் நிறுத்திக் கொண்டான்.

என்ன அநியாயம்! அந்தப் பெண் தமிழ்நாட்டிலேயே அதிகமாகவிற்கும் அந்த பத்திரிகையில் எதையோ ஒன்றைக் காட்டி, இன்னொரு வாலிபனிடம் சிரித்துக் கொண்டும், உரசிக் கொண்டும் நின்றாள். துரைராசுக்கு வாழ்க்கை கசந்தது. பகலன் எழுதிய “இளமை அல்லது காதல்” என்ற காதல் கதையில், தோல்வியில், கதாநாயகன் தற்கொலை செய்யும் காட்சியையும், “இந்த உலகில் அணைக்கட்டுகள் நிலையல்ல; ஐந்தாண்டு திட்டங்கள் நிலையல்ல; நாட்டுப் பற்று நிலையல்ல; சந்திர மண்டலம் போவதுகூட நிலையல்ல; ஆனால் காதல் ஒன்றுதான் நிலையானது; சாகாத காதலுக்காகச் சாகிறேன்” என்ற புனித வர்ணனையை நினைத்துக் கொண்டான். வீட்டுக்குள் இருந்த நார்க்கட்டிலில் போய் தொப்பென்று குப்புற விழுந்தான்.

அந்தச் சமயத்தில், அவன் அக்காள் வந்து “இதோ இந்த கதையை படி... பிரமாதம்...” என்று சொல்லி, ஒரு வாரப் பத்திரிகையை நீட்டிவிட்டுப் போனாள். (அப்போதுதான், அவன் வெளியேவந்து, அவள் எதிர்வீட்டுப் பையனிடம் “இலக்கியச் சர்ச்சையில் ஈடுபடும்போது, குறுக்கிடாமல் இருப்பான்)

காலம் ஒரு கட்டத்திற்கு வந்தது.