பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகில் பாயாத அம்புகள்

175


இருக்கும். ஐம்பது வயதுக்கு மேலான அவளை இரண்டாக மடித்துத் தலையை மட்டும் தட்டிப் போட்டு விட்டால் எப்படிப்பட்ட உருவம் கிடைக்குமோ, அப்படிப்பட்ட உருவம்தான் சக்கரையம்மா. நாற்பது வயதுக்குக் கிழானவள்: குள்ளம், தடி... கழுகு மூக்கு... வாயில் மட்டும் இல்லாமல் கண்களிலும் ஒரு கள்ளச்சிரிப்பு. பெருத்தவயிறு, வயதால் ஏற்பட்ட கோளாறாகத்தான் இருக்கவேண்டும். காரணம், கணவன் பத்து வருஷத்துக்கு முன்பே பரலோகம் போய்விட்டான்.

ஒவ்வொருத்தியும், ஏச்சுக்கு பதில் ஏச்சாய் விடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஏச்சு வராமல் போகும்போது, சம்பந்தப்பட்டவள் கோபத்தில் கீழே குனிந்து மண்ணை எடுத்துத் து.ாள் பரப்பப் போவாள். உடனே ஒத்தாசைக்கு நிற்பவர்களில் ஒருத்தி பிடித்துக் கொள்வாள்.

ஆயிற்று... அரைமணி நேரம் ஆயிற்று... இருவருக்கும் தொண்டைத் தண்ணீர் இன்னும் வற்றிப் போகவில்லை. அதே சமயம் விக்கலும், திக்கலும் வந்தது உண்மைதான். சினியம்மாவுக்கு முழங்காலுக்குக் கிழே சேலை இல்லை. சக்கரையம்மாவுக்கு, இடுப்புக்கு மேலே புடைவை இல்லை. ஒருத்திக்கு வைக்கப்படப்பு பின்னணி. இன்னொருத்திக்கு எருக்குழி பின்புலம். சோர்ந்து போகும் சமயங்களில் ஒருத்தி வைக்கப்படப்பில் சாய்ந்து கொள்வாள். இன்னொருத்தி எருக்குழி மேட்டில் ஏறிப்போய் நிற்பாள். அடித்துப் போட்ட காட்டெருமை மேல் புலி நிற்பது மாதிரி!

என்ன சண்டை என்பது அந்த இரண்டு பேருக்குமே, இப்போது மறந்து விட்டது. அப்படியே சொல்வதாக இருந்தாலும், யோசித்துப் பார்த்துத்தான் சொல்லவேண்டும். அந்தக் காரணமும் சண்டைக்கு ஒரு சாக்கே தவிர, சரக்கு அல்ல. சினியம்மாவின் பப்பாளிச் செடியின் ஒரு கொப்பு, சக்கரையம்மாவிள் ‘செருவையைக் கடந்து போய்விட்டது. உடனே, சக்கரை, அந்தக் கொப்பை ஒடித்துப் போட்டு விட்டாள். “என் வீட்டுச் செடியின் கொப்பை எப்படிழா ஒடிக்கலாம்” என்பது சீனியம்மாவின் கேள்வி. “உன் வீட்டுச்செடி என் வீட்டு சன்னலை எப்படி உற்றுப் பார்க்கலாம்” என்பது சக்கரையம்மாவின் பதில்.