பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

சமுத்திரக் கதைகள்


அந்தச் செடி மட்டும் மரமாகி அந்தக் கொப்பு ஒரு கிளையாகி, ஒரு பழம் தொங்கியிருந்தால், சக்கரையம்மா ஒசைப்படாமல் அதைப் பறித்து விட்டு அந்தக்கிளையை அடுத்த பிரசவத்திற்காக விட்டு வைத்திருப்பாள். ஆனாலும், அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமலே, செடியாகி மரமாய்ப் போனால் சினியம்மா, அப்படிப்பட்ட கிளையை வெட்டியிருப்பாள். ஆகையால் விவகாரம் அதுவல்ல கட்டு மஸ்தான உடல்காரியும், விதவையுமான சக்கரையம்மாவின் இஸ்கு தொஸ்குகளில் சினியம்மாவுக்கு ஒரு மயக்கம். படிதாண்டாமல் போய் விட்டோமே என்று பின்யோசனை செய்யும் பத்தினியான சினியம்மாவுக்கு, தனது புதுமருமகள் வந்ததும், சக்கரைக்கு, தான் வேப்பங்காயாப் போய்விட்ட வருத்தம். அத்த, அத்த’ என்று வார்த்தைக்கு வார்த்தை வலியப் பேசும் எரப்பாளிபயமவள், தனக்கு வந்த புதுமருமவள் ராசகுமாரியோடு கிசுகிசுப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒரே ஊரில் பிறந்தவர்கள் என்பதற்காக ஒரேயடியாய்க் குழைகிறாளே என்ற குமைச்சல். சக்கரையம்மாவுக்கும், பாடாவதிகிழவிக்குப் பதிலாக தனது மனோரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு பருவப்பெண் கிடைத்தாளே என்கிற் மகிழ்ச்சி. இந்த ராசகுமாரியின் புருஷன் செல்லப்பாண்டியோடு, தான் ஒரு சமயத்தில் சூதுவாதில்லாமல் பேசியதை, அந்தக் கிழவி சூதாக எடுத்துக் கொண்டு, மகனைத் திட்டியதிலிருந்தே இவளுக்கு ஒரு மனத்தாங்கல். அதுதான் இன்று தெருச்சண்டையாகிவிட்டது. பப்பாளிக்கொப்பை ஒடிச்ச சக்கரையம்மாவை, சினியம்மா கைதட்டிக் கூப்பிட்டு, “என் வீட்ல எதையும் யாரையும் விட்டு வைக்க மாட்டே போலுக்கே என்றாள். உடனே இவள், ஒன்வீடு பெரிய அரண்மனை. உன் மவன் பெரிய மன்மதன்... என்னால விட்டு வைக்க முடியல’ என்றாள்.

ஆக மொத்தத்தில் பப்பாளிக் கொப்பு பகைக்கொப்பாகி விட்டது. வீட்டுக்குள் துவங்கிய சண்டையை, இருவரும் தூக்கிப் பிடித்துக் கொண்டு தெருவுக்கு வந்தார்கள். அவர்கள் போட்ட கூச்ச்லில், தொழுவத்து மாடுகள் முளைக்கம்புகளில் கட்டப்பட்ட முளைக் கயிறுகளைச் சுண்டி இழுத்தன. பெட்டைக்கோழியை வலம் வந்த ஒரு சேவல், ஆபத்தை அறிந்து எல்லா மனிதச்