பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகில் பாயாத அம்புகள்

177


சேவல்களையும் போல அந்த கோழியை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிட்டது. மறுபக்கம் நின்ற நாய்க்கு பயந்து சுவர்ப்பக்கம் குதித்த பூனை, அந்த நாயே தேவலை என்பது போல் அந்த நாய் பக்கமே குதித்தது. பீடியும் தட்டுமாகப் போன கலர்ச்சேலைக்காரிகள் அங்கே நின்று வேடிக்கை பார்க்காமல், லேசாய்த் திரும்பி மட்டும் பார்த்துக் ாெகண்டு நடையைத் தொடர்ந்தார்கள். ‘இவள்களோட சண்டைக்கு ஒரு மரியாதை கொடுக்கப்படாது என்பது அவர்களோட எண்ணம். இன்னும் சில தும்பைப்பூ வேட்டிக்காரர்கள்... மடிப்புக் கலையாத சட்டைக்காரர்கள், அங்கே அப்படி ஒரு சண்டை நடக்காததுபோல் வேகவேகமாய் நடந்தார்கள். ஊர் விவகாரிகள் இவர்கள்... பொம்புளையையோ... பொம்பளைச் சண்டையையோ நான்குபேர் முன்னிலையில் பார்க்க விரும்பாதவர்கள். ஆனாலும், பனையேறி லிங்கசாமியும் கட்டில் கட்டி மாடக்கண்ணுவும் “நாங்க ஆம்பளைங்க நிக்கத நினைச்சுப் பேசுங்களா என்று ஒவ்வொரு ஏ வார்த்தைக்கும் ஒரு சென்ஸார், குரலைக் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் சென்ஸாரும் சினிமா சென்ஸார் போல் எடுபடவில்லை. ஆகையால் திரைப்பட சென்ஸாரைப் போல அவர்கள் கண்களுக்கும் இமைகள் திரையாயின; காதுகள் மட்டும் கூர்மையாயின.

சக்கரையம்மாவும், சினியம்மாவும் இப்போது விவகாரத்தை தர்க்கரீதியாக அலசப்போவது போல, நிதானமாகப் பேசினார்கள்.

“ஏடி சக்கரை... நீ எத்தனை குடியக் கெடுத்திருக்கே... அதாவது ஒனக்கு ஞாபகம் இருக்கா மூதேவி...”

“சொல்லுடி பாக்கலாம் கிழட்டு முண்டை.”

“கட்டுன புருஷனுக்குத் துணி வெச்சுக் கும்பிடும்போதே அதுக்காக வந்திருந்த அக்கா புருஷனோட கதவச் சாத்துனவா நீ... அதனாலய ஒன் அக்கா ஒன் வீட்டு வாசற்படி இன்னும் ஏறல. பருத்தி வியாபாரி ஆவுடைக்கண்ணன, வீட்டுக்குள்ளய வெச்சு நூலா பிரிச்சு சேதாரம் பண்ணுனே... வெளியூர் ஒயர்மென் பெண்டாட்டியக் கூட்டிட்டு ஊருக்கு வரப் போனவனைக்