பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

சமுத்திரக் கதைகள்


கண்ணடிச்சு கைக்குள்ள போட்ட... கடைசியில அவன் பொண்டாட்டி கன்னி கழியாமலே பொறந்த வீட்ல இருக்க வேண்டியதாப் போச்சு... ஊரு ஒலகத்துல ஒவ்வொருத்திவ இடக்கு மடக்கா ஒருத்தன வச்சிருப்பாள் ஒனக்கு என்னடான்னா கண்ணுல படுறவன் எல்லாம் வைப்பாளன். தொட்டா பொறுக்காம படுக்கிற தட்டுக்கெட்ட முண்ட... நீயா எனக்கு சோடி...”

“ஆமாடி... நான் அப்படித்தான்... புருஷன் செத்ததால அப்படி ஆயிட்டேன்னே வச்சுக்குவோம். ஆனா நீ... உன்னைப் பத்தி ஊருக்குத் தெரியாதுங்கிறதால நீ பத்தினின்னு அர்த்தமா...”

“எங்க... விரல மடக்கிச் சொல்லுடீ... என்னப் பத்தியோ, இந்த இவளைப் பத்தியோ... சபைல சொல்லுடி சண்டாளி... கழுதையும் கவரிமானும் ஒண்ணாகுமா”. ஆலம்பழமும், அண்டங்காக்காயும் சரியாகுமாடி... சொல்லுடி பார்க்கலாம்...”

சினியம்மா, தன் பேச்சுக்கு ஆக்ஷன் வேறு கொடுத்தாள். கீழே கதிகலங்கி உட்கார்ந்திருந்த மருமகள் ராசகுமாரியைத் தூக்கிப் பிடித்து, சக்கரையம்மாவின் முன்னால் நிறுத்தி, “சொல்லுடி’ என்றாள். ராசகுமாரி, கண்களை மூடிக்கொண்டாள். காதுகளை மூடநினைத்துக் கண்களிலிருந்து கைகளை அகற்றியபோது, மாமியார் அவற்றைப் பிடித்துக் கொண்டாள். சக்கரையம்மா, எந்த நிமிடத்திலும் அவள் ‘சங்கதியை’ வாயிலிருந்து ஒலிபரப்பப் போகிறாள் என்று பயந்தாள்! அங்குமிங்குமாய்த் தலையாட்டினாள். மாமியாரின் எதிரியிடம் கும்பிடுவது போல் கைகளைக் கொண்டு போனாள். ஆனால் சக்கரையம்மா, அவளைப் பார்க்கவில்லை. வயிறு மேடானதால், மார்பகம் மலையாக, உடம்பின் மேல் பக்கமும், கால் பக்கமும் பாதாளம் போல் தோன்ற, அசல் வாத்து மாதிரி அங்குமிங்குமய் பார்த்த ராசகுமாரியை அவள் கண்டுக்கவே இல்லை.

சினி, சக்கரையை அதட்டியது.

“ஏமுளா வாயை மூடிட்டே... என்னப் பத்தியோ, இவளப் பத்தியோ சொல்லு பார்க்கலாம்...”