பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகில் பாயாத அம்புகள்

179


“ஏ கெழட்டு முண்டே... நான் சொல்லிட்டேன்னா, நீ தூக்கு போட்டு சாக வேண்டியிருக்கும்... என் வாயை கிளறாதே...”

ராசகுமாரி, முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். நாகரீகமான குடும்பத்திலிருந்து வந்த அவள், இப்படிப்பட்ட ஒரு தெருச்சண்டைக் குடும்பத்தில் மாட்டிக் கொண்டதற்காக அழுவதாக, மற்றவர்கள் நினைத்தார்கள். சினியம்மா அதட்டினாள்.

“வாய்க்குள்ள கொழுக்கட்டையா வெச்சிருக்கே... சொல்லேமுளா...”

“சொல்லாமலா இருப்பேன்... நீ எங்க மாமனார வச்சுக்கிட்டு இருந்தது ஊருக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா, எனக்குத் தெரியும்டி... என் வீட்டுக்கார மவராசன் சாகிறதுக்கு முன்ன என்கிட்ட சொன்னார்டி... அவரு, அப்பாகிட்ட கடைசிவரைக்கும் பேசாம இருந்ததுக்கு நீதான்டி காரணமாம்... ஆம்பளைதான் பொம்புள வீட்டுக்கு வருவான். நீ என்னடான்னா, எங்க வீட்டுக்குள்ளயே வந்து, அதோ அன்னா தெரியுதே கட்டிலு.... அதுலயே என் மாமனாரோட பொராண்டிருக்கே... எம் புருஷன் சொல்லிட்டுத்தான்டி செத்தாரு....”

ராசகுமாரிக்கு தனக்கும் ஒரு துணை கிடைத்த திருப்தி. ஆனால் சினியம்மாவோ வெலவெலத்தாள். கூட்டம் முழுவதும் அவளையே கண்களால் கொத்தியது. சிலர் சக்கரையம்மாவின் வாசல்பக்கம் போய் அந்தக் கட்டிலையே ரசனையோடு பார்த்தார்கள். சண்டையில் சுவை குறைந்து வெளியேறப் போனவர்கள் கூட, கால்களைத் தேய்த்துக் கொண்டே அங்கேயே நின்றார்கள். நிலைகுலைந்து போன சீனியம்மாவைப் பார்த்து சக்கரையம்மா ஒரு தகவலையும் சொன்னாள்.

“என் மாமனாரோட வப்பாட்டியே... ஏண்டி பேச மாட்டேங்கே... ஒன் மகனோட முக்கும், முழியும் என் மாமனார் மாதிரியே இருக்கத மறைக்க முடியுமாடி...”

சினியம்மாவுக்குப் பேச்சு வரவில்லை. மூணு வருஷத்துக்கு முந்தி செத்துப்போன இந்த சக்கரையம்மாவின் மாமனார்