பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

சமுத்திரக் கதைகள்


அய்யாத்துரை, அசல் ஒட்டகச்சிவிங்கி. சொந்தப் பொண்டாட்டியே ‘மாப்பிள்ளை பிடிக்கலை என்று முதலிரவுக்குப் போக பல இரவுகள் யோசித்தாளாம். அப்படிப்பட்ட தெம்மாடிகிட்ட சேத்துப் பேசுறாளே... கையும் களவுமாப் பிடித்தது மாதிரி சனங்க பாக்குதே. பத்தினியும், பத்தரை மாத்துப் பத்தினியுமான தன்னை ஒரு பலபட்டறைப் பய பொண்டாட்டி இப்படிப் பேசிப்பிட்டாளே...

சினியம்மா, பேச்சு வராமலே உடம்பைக் குலுக்கினாள். முந்தானையை எடுத்துப் பந்து போல் சுருட்டி, வாய்க்குள் திணித்தாள். அப்படியும், அழுகையை அடக்க முடியவில்லை. அக்கம் பக்கம் பார்த்து அமங்கலமாய் விம்மியவள், அப்புறம் மனம்விட்டு முகம் விட்டு அழுதாள். மாறி மாறித் தலையில் அடித்துக் கொண்டாள். பிடிக்க வந்த மருமகளை தலையிலேயே, தன் தலையை முட்டவிட்டாள். அவள் தோளிலேயே தலையை மடக்கிப் போட்டு அவள் முதுகை நனைத்தாள். ஐயையோ... இப்படிக் கேட்டு. இன்னும் நான் உயிரோடு இருக்கேனே...” என்று மருமகளின் முதுகிலிருந்து தலையைத் தூக்கி, அங்குமிங்குமாய்க் கண்களை சுழற்றினாள். கூட்டம் வாயடைத்து நின்றது. ஒத்தாசைப் பெண்கள் சிறிது விலகிப்போய் நின்றார்கள். சக்கரையம்மா எதிரியை மானபங்கப் படுத்திய பெருமிதத்தோடு கைகளுக்கு சொடக்குப் போட்டாள். அப்போது -

மாட்டுவண்டிச் சத்தம் கேட்டது. மணியோசைச்சத்தம்: ‘இம்பா, இம்பா என்ற மணிச்சத்தம். கட்டை வண்டியின் சக்கரங்கள் கரடு முரடான தரையிலும், கற்களிலும் மோதி ஏற்பட்ட தபேலா சத்தம். அந்த சத்தங்கள் பெரிதாகிப் பெரிதாகி, அவற்றை உற்பத்தி செய்த அந்த வண்டி, தெருவின் திருப்பத்திலி ருந்து சண்டைக்களம் நோக்கி நெருங்கியது. ஒரு கையில் மாடுகளின் மூக்கணாங்கயிறுகளைக் கையில் பிடித்துக் கொண்டு, மறுகையில் சாட்டைக் கம்பை வைத்துக் கொண்டு வண்டியோட்டி வந்த செல்லப்பாண்டி, அம்மாவைப் பார்த்ததும் அப்படியே கிழ்ே துள்ளினான். மிரண்ட மாடுகளையும், குடைசாயப் போன வண்டியையும், கட்டில்கட்டி மாடக்கண்ணு சரிப்படுத்தினார்.