பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகில் பாயாத அம்புகள்

181


சீனியம்மா, மகளை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டாள். பிறகு சிறிது விலகி நின்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். செல்லப்பாண்டி, புதுப் பொண்டாட்டியைக் கோபமாகப் பார்த்தான். அவள் பயந்துபோய், தான் சண்டைக்கு ஒரு காரணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லப் போவது போல், மாமியாரை அணைக்கப் போனாள். உடனே அவள், “சண்டையில் ஒரு ஒத்தாசை செய்யாம இப்ப மட்டும் புருஷன் மெச்சுறதுக்கு வாரியாக்கும் என்று சொல்விட்டு, அவளிடமிருந்து ஒரு திமிரு திமிறி, சாட்டைக் கம்பு போலவே வாட்டசாட்டமாய் இருந்த மகனைப் பார்த்தாள். விரிந்த தலையோடு நீர்படிந்த முகத்தோடு ஒப்பாரியிட்டாள்.

“இந்த சண்டாளி என்ன கேக்கக்கூடாத கேள்வி யா கேட்டுட்டா. என் வாயால எப்படிடா சொல்றது...? இன்னும் ஒரு தடவை சொல்லுழா... எங்கழா நகரப் பார்க்கே... நின்ன இடத்துலயே நில்லு. அய்யோ... என்ன மாதிரி கேட்டுட்டா... அதைத் திருப்பிச் சொன்னா அதே மூச்சுல என் உக்ரு போயிடுமே... என் பேரனைப் பார்த்துட்டு நான் சாகாண்டாமா...”

செல்லப்பாண்டி, சக்கரையம்மாவைப் பார்த்தான். அவளோ, மேற்கொண்டு நகராமல் உதட்டைக் கடித்தபடி வீறாப்பாய் நின்றாள். “அண்ணி அண்ணி என்று அடிக்கடி கூப்பிட்ட அவளை, அந்த கணத்திலேயே ஒரு பகையாளியாய்ப பார்க்க அவனால் இயலவில்லை. அந்தச் சிரிப்பையும், “மச்சி மச்சி என்ற அவளின் பேச்சையும் அவனால் திடுதிப்பென்று உதற முடியவில்லை. ஆனாலும், நெஞ்சில் ஒலித்த சக்கரை அண்ணியின் வார்த்தைகளை, அம்மாவின் வார்த்தைகள் அழித்துக் கொண்டிருந்தன. அவன், அக்கம்பக்கம் பார்த்தபோது, கட்டில் கட்டி பட்டும் படாமல் சொன்னார்.

“பொம்பளயுவ பேச்சைப் பெரிசா எடுக்கப்படாது.டா.. அப்படி ஒண்ணும் பெரிசாவும் நடக்கல... ஒங்கம்மா சக்கரையோட சங்கதியைத் துண்டு துண்டா வெட்டிப் போட்டாள். உடனே, அந்தப் பன்னாடைப் பய மவள், ஒங்கம்மா அவளோட மாமனாரை