பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

சமுத்திரக் கதைகள்


வெச்சிருந்ததா ஒரு வார்த்தை பேசிப்புட்டாள்... அம்புட்டுத்தான் விஷயம்... விட்டுத் தள்ளு கழுதைய...”

“ஏ கட்டில்கட்டி... அந்த மூளி அலங்காரி, மூதேவி சண்டாளி ஒனக்குக் கட்டில் கட்டுறதுக்கு கூப்பிட்டான்னு ஒரஞ்சாஞ்சா பேசுறே... ஏண்டா... என் மவனே, ஒன் மூக்கும் முழியும் அந்த வீட்டு காலமாடன் மூக்கும் முழியும் மாதிரி இருக்குன்னு அந்த மூளி சொல்லுறாடா... நான் இனிமேல் இருக்கணுமாடா... அய்யோ அய்யய்யோ...”

செல்லப்பாண்டி, சக்கரையம்மாவை ஒரு சக்கையைப் போல் பார்த்தான். அத்தனை உறவும் உறவாடலும் இப்போது பகையாய் பகையாடலாய் மாறின. கிழே கிடந்த சாட்டைக்கம்பை எடுத்துக் கொண்டு, அவளை நோக்கிப் பாய்ந்தான். அவளோ, நகத்தைக் கடித்துக் கொண்டு “அடிடா பார்க்கலாம் என்பது போல் நின்றாள். இதற்குள், இரண்டு ஆண்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களையும துக்கிக் கொண்டு, அவன் சக்கரையைப் பார்த்து ஓடினான். தெம்மாடி’யான காலமாடனுக்கு, தான் பிறந்து, சண்டியரான அப்பாவுக்குப் பிறக்காமல் போயிருப்போமோ என்ற சந்தேகம் அதுவே ஒரு ஆவேசம். அவள் மட்டும் அகப்பட்டிருந்தால், அந்த சாட்டைக் கம்பே ஒரு வேல் கம்பாகியிருக்கும். அதற்குள் பலர் வந்து, அவனைக் குண்டுக்கட்டாய்த் துக்கினார்கள். இதனால் வேட்டி அவிழ்ந்து டவுசரோடு நின்ற அவன் வாயையே சாட்டையாக்கினான்.

“கட்டுனவன் செத்ததும் கண்டவன் கூடெல்லாம் படுத்துப் படுத்து, அவங்கள சாகாமல் சாகடிச்ச செறுக்கி... நீயா எங்கம்மாவைப் பார்த்து இப்படிக் கேட்டே?”

“நான்தாண்டா கேட்டேன் எரப்பாளிப் பய மவனே... இதோட போயிடு. இல்லாட்டா இன்னொரு விஷயமும் அம்பலமாயிடும்... அப்புறம் நீ ஊர்ல் இப்படி நெஞ்ச நிமுத்திக்கிட்டு லாந்துறது மாதிரி லாந்த முடியாது... என் வாயக் கிளறாதடா...”

செல்லப்பாண்டி, தன்னைப் பிடித்தவர்கிளிடமிருந்து திமிறிக் கொண்டிருந்தபோது, ராசகுமாரி பல்லைக் கடித்து