பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகில் பாயாத அம்புகள்

185


செல்லப்பாண்டியின் மனைவி ராசகுமாரிதான், நடந்ததை நம்ப முடியாமல் நகத்தைக் கடித்தாள். இன்னும் வீட்டுக்குள் போக வேண்டும் என்ற சுரணையில்லாமல், சண்டைக் களத்திலேயே நின்றாள். வாசல் படியில் தலைசாய்த்து, எங்கேயோ தொலைநோக்காய்ப் பார்த்த சக்கரையம்மாவை ஓரங்கட்டிப் பார்த்தாள். அந்த சக்கரை அத்தை அசல் மகாராணி மாதிரி, ராசகுமாரியை பார்க்காமலேயே, தன்பாட்டுக்குப் பன்மையில் பேசினாள்:

“நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்: குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்... ஆனால், துளிர்த்து வார வாழக்குருத்த வெட்ட மாட்டோம்... அது குலைபோட்டுப் பார்க்க ஆசைப்படுவோமே தவிர, கொலை செய்யமாட்டோம்: இப்ப மட்டுமில்லை. எப்பவுமே..”

புதியபார்வை (பொங்கல், சிறுகதை மலர் - ஜனவரி 1993)