பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

11


முற்பட்டதால், அவளுக்கு ஆபத்தில்லை என்று மருமகளுக்கு துக்கக்குறைவு ஏற்பட்டது.

அந்த அதிகார ஆசாமிகள் அத்தனைபேரும், அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டபோது, வலியக்கணக்கெழுத்து, தன் தகுதியை உதறிவிட்டு அவளிடம் நேரிடையாக கேட்டார். ஒருவேளை மேல்சாதிப் பெண், என்ன காராணத்தாலோ அங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம். கேட்டார்.

“நீ என்ன சாதியிழா?”

“கிழ கிடக்காவளே எங்க மாமியார்... அவங்க சாதிதான்.”

“அப்படியா சேதி... ரவிக்கை, தோள்சிலை போடுற அளவுக்கு ஈனச்சாதியான உனக்கு அவ்வளவு திமிரு உண்டாயிட்டா? நீ இந்தப் பக்கத்துக்காரி மாதிரி தெரியல... உன் பூர்வோத்திரத்த ஒண்ணு பாக்கியில்லாமச் சொல்லணும். அப்போதான் நீ உயிரோட இருக்க முடியுமா, முடியாதான்னு நாங்க யோசிக்க முடியும்..”

ரவிக்கைக்காரி, தலைக்குமேல் வெள்ளம்போன விரக்தியில் உயிருக்குமேல் ஒன்றும்இல்லை என்ற உறுதியில் நிதானமாக, அழுத்தமாக ஏமானே என்று எந்த இடத்திலும் சொல்லாமல் அவர்களுக்கு இணையாகப் பேசுவதுபோல் பேசப் போனாள். அதற்குள், எழுந்து எழுந்து விழுந்த மாமியாரை கைத் தாங்கலாய், தூக்கி நிறுத்திவிட்டு, மணியத்தையும், வலியக்கணக்கையும், மாறி மாறிப் பார்த்தபடியே, தண்ணீர் கொட்டுவதுபோல் ஒப்பித்தாள்.

“எனக்கு திருநெல்வேலி சிமங்க. என்னோட அத்தமகன் அசல் வல்லரக்கன். குடிகாரன்... சூதாடி... பொம்பளக் கள்ளன், சண்டியன். இப்படிப்பட்டவன் முறைமாப்பிளையா இருந்தாலும், அவன கட்டிக்க எனக்கு இஷ்டமில்ல. எங்க அய்யாவும் முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனா போனவாரம், நான் வயக்காட்டுல கத்தரிச் செடிக்கு களை எடுக்கையில, அவன் என் பின்புறமா வந்து, கழுத்த நிமித்தி, மஞ்த்துண்டு கட்டுண் கயித்த வலுகட்டாயமா என் கழுத்துல கள்ளத்தாலியா கட்டுனான். நான் அவனை ஒரே தள்ளா தள்ளிப் போட்டுட்டு, கழுத்துல விழுந்த