பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சமுத்திரக் கதைகள்


ஆணிபோன்ற விரல்களை உள்ளேவிட்டு இழுத்து கிழித்தான். மற்றொருவன் பின்பக்கமாக கையை விட்டு ரவி க்கையை இரண்டாக்கினான்.

இதற்கிடையே கிழே சுருண்டு கிடந்த பூமாரி, தரையில் நெஞ்சாண்கிடையாய் குப்புறப்படுத்து ஒவ்வொருவர் காலாய், பிடித்து பிடித்துக் கெஞ்சினாள். இதை வன்முறையாக நினைத்தோ என்னமோ ஏவலாளிகளில் இருவர், அவள் கழுத்தை செருப்புக் கால்களால் மிதிமிதியென்று மிதித்தார்கள். அவள் விறைத்துப் போவது வரைக்கும் கழுத்திலிருந்து கால்களை எடுக்கவில்லை. இதற்குள் ஒற்றைத் துணி பெண்கள் அருகே ஓடிவந்தும், ஒடிய வேகத்திலேயே திரும்பி ஓடியும் 'எய்யாே... எம்மோ...’ என்று மாரடித்தார்கள். வலிய கணக்கு, எதுவுமே நடக்காததுபோல், தொலைநோக்காய் பார்த்தார்.

ராசம்மா, விறைத்துக் கிடந்த மாமியாரைப் பார்த்தாள். வெறித்துப் பார்த்தாள், வெறியோடுப் பார்த்தாள், அப்படிப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு அழுகை வரவில்லை. மாறாக கண்ணிர் சிந்தவேண்டிய கண்கள் வீரியப்பட்டன. கந்தல்கோலமான ரவிக்கை, அவள் உடம்பை இரும்புச் சுருள் கம்பியாய் முறுக்கேற்றின. அத்தை மகனை எப்படி உலுக்கிப் போட்டாளோ, அப்படி தன்னைப் பற்றியவர்களை ஒரு உலுக்கு உலுக்கி நிலைகுலைய வைத்தாள். அந்த இடைவேளையில், கீழே குனிந்து கொதித்துக் கொண்டிருந்த கூப்பனிப் பானையை கைச் சூட்டோடு எடுத்தபடியே, மேலே நிமிர்ந்து நிமிர்ந்து ஆவேசியானாள்.

அந்தப் பானைக் கழுத்தை லேசாய் சாய்த்து, ஒவ்வொரு ஏவலாளியின் முகத்திலும் பானையை குலுக்கிக் குலுக்கி ஊத்தினாள். அத்தனை ஏவலாளிகளும், அரண்டு மிரண்டு கூக்குரலிட்டு அங்கும் இங்குமாய் ஒடியபோது, கூப்பனி மண்டிக் கிடந்த பானையை, தலைக்கு மேல் கொண்டுபோய் இரட்டைத்தலை உருவங்களாய் நின்ற வலியக்கணக்கின் மீதும், மணியக் கச்சேரியின் மீதும் குறிபார்த்து ஊற்றிவிட்டு, அந்தப் பானையை அவர்கள் முகங்களில் வீசி அடித்தாள். அவர்கள் தலையில் கூப்பனி திரண்டு கண்களுக்குள்