பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருள் மிக்க பூஜ்யம்

23


அந்தக் காட்டுப் பசு, தன் கால்களுக்குள் அடைக்கலம் தேடிய அந்த கன்றை முட்டப்போனது. ஆனாலும் மனம் கேட்கவில்லை. தலைகீழாய் கவிழ்த்த முகத்தை நிமிர்த்தி, மீண்டும் ஓடியது. அந்தக் கன்றும் விடவில்லை அதன் பின்னால் ஓடியது. இதுவும், பசுபோன திசையில் பாய்ந்தபோது, அது திசையை மாற்றியது. இது நெடுக்காய் ஒடும்போது அது குறுக்காகவும், குறுக்காய் ஓடும்போது, நெடுக்காகவும், 'போக்குக்காட்டி' ஓடியது. நிற்கும்போது ஓடியும் ஓடும்போது நின்றும், அந்தக் கன்றிடம் கண்ணாமூச்சி காட்டியது. பயணிகள் கைகாட்டும்போது நிற்பதுபோல் பாவலா காட்டி அவர்கள் நிதானப்படும்போது 'காலன்' வேகத்தில் பாயுமே பல்லவன் பேருந்துகள். அதைப் போலவே .

இந்தக் காட்டுப்பசுவும், இந்த அந்நியக் கன்றை பார்த்த ஏமாற்றமும், ஈன்றெடுத்தக் குட்டியைப் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பும், இரட்டை வேகமாக எங்கோ ஒடி, எங்கேயோ மறைந்தது,

இந்தக் கன்றுக்குட்டிக்கும் புரிந்துவிட்டது. அது புரியப் புரிய அதன் கால்கள் நடுங்கின. கண்கள் நனைந்தன. மூச்சு ஒலி எழுப்பி ஒலமிட்டது. அதன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் சக்தி விரயத்தால் துடித்தது. கொம்புகள் தலையை அழுத்தும் முட்கம்பிகளாயின. கால்களுக்கு உடம்பே பாரமானது.

குதிரையின் முன்பக்கச் சாயலும், கோதுமை நிறமும் செஞ்சிவப்புக் கால்களும் கொண்ட அந்த சின்னஞ்சிறு கன்று, பொன்வண்டு ஒன்று இறக்கைகளை கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாய் பெருவடிவம் பெற்றது போன்ற நேர்த்தி கொண்ட அந்தப் பொன்குட்டி, இப்போது தன்னைத்தானே வீழ்த்திக் கொண்டு தரையில் சாய்ந்தது. பூஜ்யம் போல் பொருள்மிக்க அந்தக் காட்டுச் சூன்யத்தில் கண்களை மூடிக் கொண்டு, திக்கிழந்து, திசையிழந்து செயலிழந்து கிடந்தது. என்ன ஆனாலும் ஆகட்டும் என்ற விரக்தி. ஏகாந்தத்தின் எதிர்உணர்வு. எது வந்தும் அடித்துத் தின்னலாம் என்று விடுத்த மரண அழைப்பு; அறைகூவல்; வாழ்வு கசந்த கசப்பில், மரணம் இனித்தே திரும் என்ற எண்ணமோ