பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருள் மிக்க பூஜ்யம்

25


தளர்ச்சி. அதே சமயம் அம்மாவை சித்ரவதை செய்து கொன்ற அந்தக் கொடியவர்களை கொல்ல வேண்டுமென்ற வேகம். பழிக்குப் பழி வாங்க நினைக்கும் பார்வை. அப்போது

அந்தக் காட்டுக்கே மதம் பிடித்தது போன்ற சத்தம் அருகிலேயே போர்ப்பரணி மாதிரியான பெருஞ்சத்தம். யானைகளின் பிளிறல்... அந்த கஜராஜாக்களின் குட்டி ஒன்றை ஏதாவது ஒரு புலியோ அல்லது சிறுத்தையோ திருட்டுத்தனமாக கொன்றிருக்க வேண்டும் அல்லது குற்றுயிரும் கொலையுயிருமாய் ஆக்கியிருக்க வேண்டும். குட்டியை பறிகொடுத்த தாய் யானையுடன், இப்போது அத்தனை யானைக்கூட்டமும் சேர்ந்து போர்ப் பிரகடனம் செய்தன. யஎங்கே இருக்கிறாய் பகையே? இங்கே வா பேடியே...";

அந்த பிளிறலால் காட்டுநாய்க் கூட்டம் நெல்லிக்காய் குவியலாய் சிதறுகின்றன. உயிர் பிழைத்தால் போதும் என்பதுபோல் ஓடின. அதே சமயம் -

இரண்டு நாய்கள் இந்தக் குட்டியின் பக்கம் எதேச்சையாய் வருகின்றன. எதிர்பாராத உணவைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்கின்றன. பிறகு இரண்டும் சேர்ந்து இந்தக் குட்டியை ருசியோடு பார்க்கின்றன. எந்தக் குறைப்பும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாய் கால்களை நகர்த்துகின்றன.

அந்தக் கன்றுக்குட்டி வீறாப்பாய் நிற்கிறது. அதே சமயம், ஒரு சிந்தனை மாற்றம். இந்தக் கொடுங்கோலர்களிடம் சிக்கினால் ஒரேயடியாய் கொல்லாமல், சிறுகச் சிறுகச் கொன்று சித்திரவதை செய்வார்கள். அம்மாவைக் கொன்ற இவற்றின் வாயில் விழக்கூடாது. இவற்றிற்கு இரையாகி அவற்றை மேலும் சந்தோஷமாக்கக் கூடாது. கடவுள... கடவுளே... இந்த உயிர்க் கொல்லிகளுக்கு என்னால் எமனாக முடியலியே... முடியலியே.

அந்தக் கன்று, உடல்வாதையும், உயிர்வாதையும் ஒருசேர, அவற்றையே வேகமாக்கி, ஒரே துள்ளாய் துள்ளி, சிறிது தொலைவில் உள்ள பாறைக்குவியல் பக்கம் விழுகிறது. இப்போது