பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சமுத்திரக் கதைகள்


ராமநாத சாஸ்திரி, ஒரு கணம் துர்வாசரானார். மறு கணம் விசுவாமித்திரர்போல், அவர்களை, வயிறு எக்கிப் பார்த்தார். அடுத்த கணம் வசிட்டரானார். பின்னர், இந்த மும்முனிகளாலும் ஆட்கொண்டவர் போல், ஆண்டவ- அகிலா தம்பதியை ஆட்டிப்படைத்து பேசுவதுபோல் பேசினார்.

“இதுக்குத்தான் நான் எவர் வீட்டுக்கும் வரமாட்டேங்கிறது. ஒரு சொல்லு சொன்னால், அந்த சொல்லுலயே நிற்கிறவன் நான். இல்லாட்டி சொல்லமாட்டேன். நீங்க சொல்றதைப் பார்த்து, அழுவுறதா, சிரிக்கிறதான்னு நேக்கு புரியல...”

ஆண்டவனும் அகிலாவும், மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சாஸ்திரியை யார் சிரிக்க வைப்பது, என்று அந்தக் கண்கள் பேசிக்கொண்டன. அகிலா, முந்திக் கொண்டாள்.

“உட்காருங்க சாமி... மோரா... ரசனாவா....”

“ரெண்டும் வேண்டாம். மொதல்ல வந்த காரியத்தைப் பார்ப்போம்.”

“அதுல உட்காருங்க சாஸ்திரி ஸார்.”

ராமநாத சாஸ்திரி, ஆண்டவன், சுட்டிக்காட்டிய ஒற்றைச் சோபா இருக்கையில் உட்காராமல், அந்த வீட்டின் பளிங்குத் தரையில், இரண்டுக் கால்களையும் விரித்துப்போட்டு, இரண்டு கரங்களையும் முதுகிற்குப் பின்னால் முட்டுக்கொடுத்து, உட்கார்ந்தார். மேலே எகிறிய மின்விசிறியில், அவரது நடுத்தலை முடி, முன்தலை பொட்டல் மேட்டில், கதிரடிப்பதுபோல், சாய்ந்து சாய்ந்து மோதியது. அந்தம்மா, பதறிப் போனாள்.

“என்ன சாமி நீங்க... சோபாவுல... உட்காருங்கோ...”

“என் வசதிப்படி, என்னை விட்டுடுங்கோ... நேக்கு இதுதான் வசதி. இந்த வேனா வெயிலுல நடந்த களைப்புல, இப்படி காலு கைய விரித்துப்போட்டு, ஒடம்பை நனைத்த வேர்வைய மின்விசிறி, துளித்துளியாய் ஆவியாக்கிறதுல இருக்கிற சுகமே தனி. உங்க