பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சமுத்திரக் கதைகள்


ராமநாத சாஸ்திரி, அந்தக் காகிதக் கத்தைகளை, ஒவ்வொன்றாகப் பார்த்தார். நான்கைந்து ஜாதங்களை கழித்துக் கட்டிவிட்டு, இன்னொன்றை எடுத்துப் பார்த்தார். அதிக நேரமாய் பார்த்துக்கொண்டே இருந்தார். அகிலா-ஆண்டவன் முகங்களில், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...' அதனை நிதானமான வார்த்தைகளாக ஆண்டவன் வெளிப்படுத்தினார்.

“இந்த ஜாதகம் நல்லா இருக்குதோ சாஸ்திரி ஸார். நல்லாத்தான் இருக்கும்.”

“நல்ல ஜாதகந்தான். ஒங்க பையனும், இந்தப் பொண்ணும் நகமும் சதையும் மாதிரி நன்னா இருப்பாள். ஆனாலும், ஒங்க வீட்டுக்கு ஆகாது.”

“அவங்க நல்லா இருந்தா போதாதா சாமி? அதுக்குமேல என்ன வேணும்?”

“ஏடாகோடமாய் பேசாதம்மா... எழுந்து போய்க்கிட்டே இருப்பேன். இது ஆயில்ய நட்சத்திரம். இந்தப் பொண்ணு ஒங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனேயே, நீங்க ரெண்டு பேரோ, அல்லது ரெண்டுல ஒருத்தரோ மண்டைய போட்டுடுவேள். சம்மதமா?”

சம்மதமில்லை என்பதுபோல், தம்பதியர், சிரித்து மழுப்பியபோது, சாஸ்திரி, ஒவ்வொரு காகிதத்தையும் எடுத்து, அதற்கு நேர்முக வர்ணனை கொடுத்தார். ஒன்று நாகதோஷமாம்... இன்னொன்று செவ்வாய் தோஷமாம்... மற்றொன்னு ஏக நட்சத்திரமாம். இப்படி ஒவ்வொன்றையும் நிராகரித்துக்கொண்டே போன சாஸ்திரி, அவர்களது முகத்தில் ஏற்பட்ட கலக்கத்தைப் பார்த்துவிட்டு, ஆறுதலாய்ப் பேசினார்.

“நான் இப்படி வேண்டாமுன்னு சொல்றத தப்பர் நினைக்காதேள். ஓங்கமேல இருக்கிற விசுவாசந்தான் அப்படி பேசவைக்குது. உங்க பிள்ளாண்டான், என்னோட பிள்ளாண்டான் மாதிரி. மணமக்களுக்கு தினம், கணம், மகேந்திரம், திர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், வேதை, நாடி... இப்படி