பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீரு பூத்த நெருப்பு

37


பத்துப் பொருத்தங்கள் இருக்கணும். எல்லாம் இருக்கிறது கஷ்டம். ஆனால், பத்துக்கு ஏழு இருந்தால், உத்தமம். ஆறு இருந்தால், மத்திமம்... ஐந்தோ அல்லது ஐந்துக்கு கீழேயோ இருந்தால், அதமம்..”

சாஸ்திரி, பேசி முடித்துவிட்டு, இன்னொரு காகிதத்தை எடுத்தார். அந்தச் சமயத்தில், ஒரு இளைஞன் உள்ளே வரலாமா வேண்டாமா என்பதுபோல், நடைவாசலுக்கு உள்ளே ஒரு காலும், வெளியே ஒரு காலுமாக நின்றான். அகிலா கேட்டாள்.

“என்னடா. வேளகெட்ட வேளையில.”

“நீங்கதானம்மா வரச்சொன்னிங்க... அயர்ன்பண்ண துணி இருக்குன்னு சொன்னிங்களே.”

“ஆமாம் மறந்துட்டேன். இதோ நில்லு.”

அகிலா, உள்ளேபோய், ஒரு சந்தனக்கலர் சபாரி பேண்டையும், சட்டையையும் எடுத்து வந்து, அந்த இளைஞனிடம் நீட்டினாள். ஆண்டவன், மனைவியைக் கண்டித்தார்.

“இந்த வெயிலுல எப்படிம்மா சபாரி போட்டுக்க முடியும்?”

“இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டியில கலந்துக்கிடுlங்க... மறந்துட்டீங்களா? சாதாரண சட்டைப் பேண்ட்ல போனால், உங்களை வாட்ச்மேனே வெளியில தள்ளுவான்.”

கவனம் கலைந்த கோபத்தில், சாஸ்திரி, அவர்களைக் கடுமையாகப் பார்த்தார். கலகலப்பாய் சிரித்த அகிலாவோ, சாஸ்திரி, தனது மனைவியையே மனதுக்குள் திட்டும்படி விளக்கமளித்தாள்.

“இவர் குழந்தை. இவருக்கு துணிமணி எடுக்கிறதுல இருந்து, எதுக்கு எது 'மேட்சு'ன்னு எடுத்துக் கொடுக்கிறது வரைக்கும் நான்தான்.”

“ஆமாம் சாஸ்திரி ஸார். நாங்க ரெண்டு பேரும், ஒரே சமயத்துல சிவலோகம் போக முடியாது. இவள், பூவோட பொட்டோட போகணும் என்கிறாள் நானோ, இவளுக்கு