பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீரு பூத்த நெருப்பு

39


அகிலா, குங்குமத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு, நெற்றியில் இட்டுக்கொண்டாள். எஞ்சிய குங்குமத்தை, லிங்கம் பொறித்த 'ஆட்டியன்' வில்லையாய் தொங்கும் தாலியின் இரண்டு பக்கமும் வைத்து, தங்கச் செயினோடு அவற்றை மேலே துக்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

இந்த நிகழ்வை பரவசமாகப் பார்த்த சாஸ்திரி, “நன்னா இருப்பேள்” என்று சொன்னபடியே, படியிறங்கிப் போய்விட்டார்.

ஆண்டவனும் அகிலாவும் அந்தக் கூடத்திற்குள், அங்கும் இங்குமாய் நடைபோட்டார்கள். குறுக்கும் நெடுக்குமாய், ஒருவரை ஒருவர் மோதாக் குறையாய் நடந்தார்கள். கால்மணி நேரத்திற்குப் பிறகு, ஆண்டவன் இழுத்து இழுத்துப் பேசினார்.

“நல்ல இடந்தான். கார் இருக்கு... பங்களா இருக்கு... பதவி இருக்கு. ஆனாலும்...”

அகிலா, அவரை நேருக்கு நேராய் பார்த்தபடியே, திட்டவட்டமாக திர்ப்பளிப்பதுபோல் பேசினாள்.

“இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்.”

- அமுதசுரபி (மே 2000)

Ο