பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சமுத்திரக் கதைகள்


“இன்னொரு பக்கம், இந்த குரோமோசோம்களில் எந்த வகையான ஜீன், இன்சுலின் உற்பத்தியை ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுது... அதுக்கு மாற்று வேறு குரோமோசோம்களில் இருக்குமா? என்பதை கண்டறிவதற்கும் ஒரு முயற்சி நடக்கிறது. செயற்கை இன்சுலின் தயாரிக்கும் எங்க கம்பெனி, அந்த சர்வதேச நிறுவனத்தோட ஒரு கொலாபரஷேன், அதாவது கூட்டுத் தயாரிப்பு செய்வதற்கு ஒரு ஒப்பந்தம் போட்டது. இதுக்காக, எங்க கம்பெனியில் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நானும் ஒருத்தி. அதுவும் ஒரே பெண். லண்டனில் மூன்று வருட ஆராய்ச்சி செய்யணும்.”

தந்தை பிரமிப்பாயும், தாய், தவிப்பாயும் மகளைப் பார்த்தபோது, கிதா தொடர்ந்தாள்.

“எந்த உயிருமே, ஆரம்பத்தில் ஒரே ஒரு செல்லுலதான் துவங்குது. அப்புறந்தான் படிப்படியாய் கோடிக்கணக்காக மாறுது. ஆனால், அந்த ஒரே செல்லுக்குள்ளே, கம்யூட்டர் புரோக்கிராம் மாதிரி, இன்னின்ன காலத்தில், இன்னின்ன மாறுதல் அல்லது வளர்ச்சி தளர்ச்சி ஏற்படணுமுன்னு இருக்குது. ஒரே செல்லாய் இருக்கும்போது, பார்க்கிறதுக்கு ஒரே ஜீனாய் தோன்றுகிற ஆலமரம் வேறு விதமாகவும், குழந்தைக்கரு, வேறு விதமாகவும் மாறுது. மானுடத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொருத்தர் குரோமோசோம்களில் உள்ள ஜீன்களில், மூன்று கோடி ஆண்டுகால நமது முன்னோர்களின், மனவோட்டங்கள் பதிவாகியுள்ளன. இதை வைத்து, மானுட வரலாற்றையும் கண்டுபிடிக்கலாம். எங்க கம்பெனிய பொறுத்த அளவில், இன்சுலின் சம்பந்தப்பட்ட குரோமோசோமின் ஜீனே முக்கியம். இதன் மூலம் நீரழிவுக்கு, நிரந்தர தீர்வு காணும் குரோமோசோமை கண்டுபிடிப்பதே எங்கள் ஆராய்ச்சி. ஆனாலும், நான் கேட்டுக் கொண்டபடி, எய்ட்ஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடுற இயல்பு எந்த குரோமோசோமிலாவது இருக்குதா என்கிறதையும் ஆய்வில் சேர்க்கணுமுன்னு, மனோகரன் சார்கிட்ட சொல்லியிருக்கேன். அவரும், கம்பெனி நிர்வாகத்துக்கு எழுதுவதா ஒப்புக்-