பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சமுத்திரக் கதைகள்


“வட சென்னையில், பினவாடை கொண்ட கல்லறைச் சாலையில், ஒற்றை அறையில், ஒண்டிக் குடித்தனமாய் வாழ்ந்தோம். வேலைக்காரி வைக்க முடியாத நிலைமையில், உன் அம்மா, முறைவாசல் என்ற பெயரில் வாரம் ஒருமுறை சாக்கடை “காவாயை“ கழுவிவிட்டு, கழிவறையையும் சுத்தம் செய்தவள். உள்ளே படுத்தால், மூட்டைப் பூச்சி கடிக்கும். வெளியே படுத்தால் கொசு கடிக்கும். இந்த ரெண்டுக்கும் ரத்தம் கொடுத்து வாழ்ந்தோம்.”

“என்னப்பா நீங்க... நானும், அதே இடத்தில் பிறந்து வாழ்ந்தவள்தானே... இப்போ அதுக்கென்ன?”

“நீ அங்கே வளர்ந்தே... ஆனால், வாழல. இப்படி வறுமைக் குப்பை வீட்டுல வாழ்ந்த எங்கள இந்த பங்களாவுல வாழ வைக்கிற... பஸ்ஸுக்கு கால் கடுக்க நின்ற எங்களை, ஏ.சி. கார்ல போக வைக்கிறே... தெருவுல சுக்குக் காபி குடித்த எங்களை, இப்போ பழரசம் குடிக்க வைக்கிறே... வாத்தியார்தானே என்று என்னையும், இவளையும் ஏளனமாய்ப் பார்த்த, உறவுக்காரங்கள பிரமிப்பாய் பார்க்க வைத்திருக்கே.... இதெல்லாம் நீ போட்ட பிச்சை...”

கீதா, இருக்கையை விட்டு எழுந்த வேகத்தில், அருணாசலம் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி ஒற்றைச்சோபா இருக்கை, பின்னோக்கி நகர்ந்தது. கிட்டத்தட்ட அவர் கிழே விழப்போனார். எப்படியோ சமாளித்து உட்கார்ந்தார். தந்தை தடுமாறியதோடு, குரலும் தழுதழுத்தபோது, கிதா, தனது தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து, தரையில் வீ சியபடியே கத்தினாள் . ‘என்னை ஏன் அந்நியப்படுத்துlங்க? நீங்க பெற்ற மகள் நான். பிச்சை கிச்சைன்னு ஏன் பெரிய பெரிய வார்த்தையா பேகறீங்க... நீங்க ரெண்டு பேரும், என்ன படிக்க வைக்கிறதுக்கு பட்டபாட்டை மறக்கிற பாவி இல்ல நான். அம்மா, என்னை காலையில நாலு மணிக்கே எழுப்பிவிட்டு, காபி கொடுக்கிறதுக்காக, அந்தச் சமயத்துல எங்கே துங்கி விடுவோமோன்னு... ராத்திரி முழுதும் தூங்காம இருந்தது எனக்குத் தெரியும்பா... அப்படித் தப்பித்தவறி அம்மா தூங்கினால், நீங்க அம்மாவை திட்டுன திட்டும் இன்னும் காதுல