பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சமுத்திரக் கதைகள்


தாவர சங்கமச் சூழல் என்று சரியாக புரிந்து கொள்கிறவர்களுக்கு குழப்பம் வராது.”

“வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் கருமுட்டையிலும், ஆண் விந்திலும் உள்ள, தலா நாற்பத்தாறு குரோமோசோம்களில் கோடிக்கணக்கான கேரக்டர்கள் உள்ளன. இவை முக்கியம் என்றாலும், சுற்றுப்புறச் சூழலும் அதற்கு இணையான முக்கியத்துவம் பெறுகிறது.

'உதாரணமாய், ஒரு ஆல விதையில் அகண்ட மரமும், விரிந்த கிளைகளும், காய்களும், கனிகளும் குறிப்பிட்ட சமயத்தில் வெளிப்படுவதற்கான இயல்புகள் உள்ளன. ஆனால், அந்த ஆல விதையை, நட்டு, செடியாக்கி, ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாக்க வேலி போட்டு, அடிக்கடி உரம் போட்டு வளர்த்தால்தான் அந்த விதை செடியாகி, நிழல் கொடுக்கும் மரமாகும்.’

‘இப்படிப்பட்ட சுற்றுப்புறச்சூழல் இல்லை என்றால், அந்த விதைக்குள் இருக்கும், இயல்புகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.’

‘இதுபோல், உங்கள் தாயாதிகளின் குரோமோசோம்கள், அம்மாவின் வம்சாவழி குரோமோசோம்கள் வழியாய் வந்த, எனது குரோமோசோம்களில், ஏதோ ஒன்றில், நான், ஆய்வு செய்யும் விஞ்ஞானியாய் ஆகக்கூடிய இயல்புகள் இருக்கின்றன. இவற்றை கருமுட்டையில் விதையாக்கி, குழந்தையாய் பிறப்பெடுக்க வைத்து, உரமிடுவதுபோல் படிப்பளிதவர்கள் நீங்கள்- உங்கள் மூலம் மனிதச் செடியான நான், ஒரு விஞ்ஞான ஆலாய், பல்கிப் படர, நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். காரணம், உங்களை மீறியோ, அம்மாவை மீறியோ எதையும் செய்ய, என் மனம் இடம் தரவில்லை.' 'நம் முன்னோர்களுடைய பதிவுகளையும், நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த சுற்றுப்புறச் சூழலையும் வைத்துத்தான், நான், ஒரு மேரி கியூரியாய், ஒரு லேடி லவ்லாக்காய், ஒரு இந்திய கல்பனாவாய் மாறப்போகிறேன். இதில் மகத்தான பங்கு, உங்கள் இருவருக்கும்,