பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சமுத்திரக் கதைகள்


கீதாவின், குரல் நெகிழ்ந்தபோது, அப்பாக்காரர், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

“நான் ஒரு விஞ்ஞானியோட தந்தையம்மா. இந்த மகிழ்ச்சி அந்தக் கவலையை தோற்கடிச்சுட்டுமா. ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். இனிமேல் உன்னை எப்போ பார்ப்போமோ.. ஒரு மூன்று நாள் லீவு போட்டுட்டு எங்க கூடயே இரும்மா.”

தாய்க்காரி, பிரமித்து நின்றபோது, தந்தை, மகள்மேல் ஒரு குழந்தையாய் சரிந்தார்.

மகளோ, ஒரு தாயாய், அவர் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

ஆனந்த விகடன் - 2001