பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சமுத்திரக் கதைகள்


உற்ற நண்பர்களை தேடிப் பிடித்து சேர்ந்து கொண்டும், உள்ளே போனார்கள்.

காப்பகத்தின் உள்வளாகம், மாவிலைத் தோரணங் களாலும், மல்லிகைச் சரங்களாலும், காகித கலர் நட்சத்திரங் களாலும், ஆகாயப் பந்தலாய் மின்னியது. இதன் அடர்த்தி, சூரியக் கதிர்களை கட்டிப்போட்டது. வழக்கமான திரைப் படப் பாடல்களுக்குப் பதிலாக, வைஷ்ணவ ஜனதோவிலிருந்து, ஒராயிரம் சூரியன் உச்சி திலகம் வரை பாடல்களாக ஒலித்தன.

மண மேடையில், பக்க வாட்டில், இரட்டை இருக்கை சோபாவில், மணமகள் ராணியும், மணமகன் ராமுவும், கழுத்து நிறைய மாலையுடன், கண் கொள்ளாப் பார்வையுடன், வாய் கொள்ளாச் சிரிப்போடும், ஒருவருக்கொருவர் பதில் வார்ப்பாய் அமர்ந்திருந்தார்கள். மேடையின் நடுப்பகம், ராஜநாற்காலிகள் தவிர்க்கப்பட்டு, சிற்றரசு நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. மேடைக்கு எதிரே கண் முட்டும் அளவிற்கு கூட்டம். முதல் பகுதியில் ஒரே மாதிரியான வாயில் புடவையோடு, காப்பகப் பெண்கள் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்தார்கள். முன் பக்கத்து முகப்பில் மாவட்ட மற்றும் உள்ளுர் வி.ஐ.பி.கள்... கூட்டம் நெடுக இருப்பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த காப்பக சேவகிகள்...’ என்ன வேண்டும் சொல்லுங்கள், என்று கேட்பது மாதிரி, முகம் குவித்து நின்றார்கள். மணமக்களை, அண்ணாந்து பார்த்த காப்பகப் பெண்களில் சிலர், அவர்களைப் போல் தங்களுக்கு ஆக வில்லையே என்ற விசனம். பலருக்கோ, அப்படி ஆகி விட்டதே என்ற சோகம்.

இதற்குள் அமைச்சர் வந்துவிட்டார். முன்னால் பாதுகாப்பு ஜிப்பும், பின்னால் தொண்டர், வேன்களுமாய் வந்ததும், கூட்டத்தினர், அந்த உள்ளூர் மாட்டை விலையாக்க போவதில்லை என்பது போல் சும்மாவே இருந்தார்கள். அமைச்சர், அந்த மக்களைப் பார்த்து தொண்டர்போல் வணக்கம் போட்டபோது, ஒவ்வொரு குட்டாம் பட்டியாரும், தான்தான் அவரை அமைச்சராய் ஆக்கியதுப்போல் ஆசிர்வாதமாய் கைவிரல்களை அகலப்படுத்தினார்.