பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலம்

63


“இப்போது நம் கண் முன்னால் வளர்ந்து மேலோங்கிய நமது அமைச்சர் முடிசூடி, இந்த திருமணத்தை இனிதே நடத்தி வைப்பார். டில்லிக்கு ராசாவானாலும், தாய்க்கு பிள்ளை என்பதுபோல் நமக்கு எப்போதும் பிள்ளையான தம்பி முடிசூடி வருகிறார்.”

லூர்துமேரி பேசி முடிக்கவும், உள்ளூர் அமைச்சரான முடிசூடி மைக்கருகே போவதற்கும் சரியாக இருந்தது. மேரிக்கு கிடைத்த கைத்தட்டல்களை, அமைச்சர் தனக்குத்தான் என்று மானசீகமாக வழிப்பறி செய்துகொண்டு, பேச்சாற்றலைக் காட்டினார்.

“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரேசா ஆகியோரின் முப்பெரும் உருவகமாகத் திகழும் லூர்துமேரி அம்மையாரும், அவரை பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளர் இளங்கோவும், எனக்கு அம்மையப்பன். என் படிப்பிற்கு உதவியவர்கள். என்னை அரசியல் மேடையில் உலா வரச் செய்தவர்கள். இப்படிப் பட்ட இந்த சேவை இமயங்கள் இன்று, மூன்றாண்டுகளுக்கு முன்பு கொடியோரால் கற்பழிக்கப்பட்டு, ஒரு புதர்ப் பக்கம், குற்றுயிரும் குலையுயிருமாய் வீசப்பட்ட ராணி அவர்களை...”

இந்தச் சமயத்தில், காப்பகச் செயலாளர் இளங்கோ, வேக வேகமாய் எழுந்து, அந்த இளம் அமைச்சரின் காதைக் கடித்தார். உடனே அமைச்சரும் காது வலியில் அவதிப்படுவது போல பேசினார்.

‘நான் பேசியது தவறுதான் நண்பர்களே தவறுதான். கற்பழிக்கப்பட்ட ராணியின் கற்பழிப்பைப் பற்றியோ, அவர் புதருக்குள் வீசப்பட்டதைப் பற்றியோ நான் பேசியிருக்கக் கூடாதுதான். இதனால் மணமகளும் என் கண் முன்னால் காட்சிதரும் காப்பகப் பெண்களும் இன்னும் அழுகையை அடக்க முடியாமல் அல்லல் படுவதை அறிவேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இளங்கோ அவர்கள் காதில் சொன்னதை பகிரங்கமாக அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணை, அவள் எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்ட