பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

சமுத்திரக் கதைகள்


பிறகு, அவளைத் தள்ளி வைப்பதோ அல்லது அவளை உதறிவிட்டு இன்னொரு பெண்ணோடு இணைவதோ, அசல் போக்கிரித் தனம். ஒரு சமூக விரோதியால்தான், தாலி கட்டிய மனைவியை தள்ளி வைக்க முடியும் என்று இளங்கோ அவர்கள் அன்று சொன்னதையும், இன்று சொன்னதையும், இனிமேல் அப்படி சொல்லப் போவதையும் இணைத்து, இளைஞர்களுக்கு அறிவுருத்த கடமைப் பட்டுள்ளேன்.

நான் பெரியார் பக்தன் என்றாலும் சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன். உள்ளத்தால் பொய்யாத, உடலால் ஓயாத இளங்கோமேரி தம்பதி நடத்தி வைக்கும் இந்தத் திருமணம் பல்லாண்டு பல்லாண்டு காலம் உள்ள அளவிற்கு நீடிக்கும். சிலர், மதம் மாறி திருமணம் செய்வார்கள். சிலர், சாதி மாறி மனப்பார்கள். ஆனால், எனது ஆசான்களான அய்யா இளங்கோ அவர்களும், அம்மா மேரி அவர்களும் மதங்களையும், சாதிகளையும் புறம்தள்ளி, கலப்புமணம் செய்து கொண்ட வழிகாட்டிகள். இவர்களின் வழியில் எந்த தம்பதியும் நடந்தால், தொல்லை இல்லை. துயரம் இல்லை... மாறாக நன்மை கூடும்... நல்லது அனைத்தும் தேடிவரும்.’

அமைச்சர் முடிசூடியின் குரல் வறண்டு போயிருக்க வேண்டும். குறிப்பறிந்து ஒருவர் நீட்டிய ஒரு தண்ணிர் குவளையை புறந்தள்ளி விட்டு, ஒரு கோலாவை குடித்தார். குடித்த வாயை தோள் துண்டால் துடைத்த படியே வடிகட்டிப் பேசினார்.

‘நமது இளங்கோ அவர்களும், லூர்துமேரி அம்மையாரும் சுப சகுனங்கள். இவர்கள் ஏற்பாடு செய்த திருமணமும் சுபமாகவே நீடிக்கும். எனது அம்மையப்பனிடமிருந்து, நான் கற்று கொண்டதை கடைபிடிப்பதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டவன். இளங்கோ அவர்கள், தனது மனைவியான லூர்து அம்மையாரை நீங்க நாங்க என்று பன்மையில்தான் அழைப்பார். இவர்கள் போல் அனைவரும் மனைவியரை இனிமேலாவது நீங்க நாங்க என்று அழைக்காது போனாலும் நாயே... பேயே... நரியே... மாடே... முண்டமே... பட்டிக்காடே... காண்டாமிருகமே... கழுதையே...’ என்று திட்டாமலாவது இருக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்