பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சமுத்திரக் கதைகள்


இளங்கோ, அந்தப் பெண்ணை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல் தடுமாறினார். அவள் கழுத்தில் தொங்கிய தாலி தன்னை துக்கு கயிறாய் பற்றுவது போல நெளிந்தார். இதற்குள் திருமதி லூர்துமேரி இளங்கோ, பழக்கப்பட்டது போல் தோன்றும் அந்த பதிமூன்று வயதுப் பையனை, தடுமாற்றத்தோடு பார்த்தபோது, பழைய முகக்காரி, மேரியை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

‘இவள்தாண்டா உன் அம்மா... நீ மூணு வயசுக் குழந்தையா இருக்கும் போது, உன்னை விட்டுட்டு, என் கழுத்துல தூக்குக் கயிறு மாட்டுன இந்த மனுசனோட ஒடிப் போனவள்... சரி...

சரி... புறப்படு... வேற ஏதாவது ஒரு அனாதை ஆசரமத்தைப் பார்த்து போவோம்...’

நோயும் நொம்பலையுமான அந்த சிறுவனும், தனக்குத் தானே பாடை விரித்தது போல் தலைவரி கோலங் கொண்ட அந்தப் பெண்ணும் திரும்பி பாராமல் நடந்தார்கள்.

ஓம் சக்தி திபாவளி மலர், 2001