பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாமர மேதை

தாமோதரன், சுற்றியிருந்த ஈரத்துண்டு, அவன் இடுப்பில் இருந்து நழுவி, தொடைகள் வழியாக ஊர்ந்து, முழங்கால்களில் ஓடி, தரையில் குதித்து விழுந்தது. அந்த துண்டுக்கு இருந்த நாணம் கூட, அவனுக்கு இல்லை. கிழே விழுந்த அந்த ஈரத்துணி, யாரையும் பார்க்க விரும்பாதது போல் ஒட்டு மொத்தமாய் சுருங்கி சுருண்டு கிடந்தது. ஆனால் அவனோ வாராந்தாவி ருந்து வரும் வெளியாட்களின் நேரடிக் கண்பார்வைக்கு உட்படும் அந்த அறையின் கதவை சாத்தாமலே, அங்கும் இங்குமாய் ஓடினான். பீரோவை திறந்து துணிகளை வீசிப்போட்டான். சுவரோடு பொருத்தப்பட்ட ரேக்கில் உள்ள துணிமணிகள் உள்ளிட்ட அத்தனைப் பொருட்களையும் கீழே வீசிப் போட்டான். பிறகு மெத்தைக்கட்டிலின் அடிவாரத்தில் தவளைபோல் தாவி தவழ்ந்து தேடினான். மீண்டும் நிமிர்ந்து டெலிபோனை தூக்கிப்பார்த்தான். சாளரத் திரைச்சிலையை இழுத்துப்பார்த்தான். பின்னர் காலில் மிதிபட்ட அண்டிராயரை அடையாளம் கண்டவன் போல், அதை - எடுத்து இடுப்புக்கு சரிசமாமாய கொண்டுவந்து, கால்களில் நுழைக்கப்போனான். இதற்கு பிறகு, ஒருசின்னப் பிள்ளையின் செல்லக் கோபத்தோடு கத்தினான்.

‘உன்னத்தான் ... இங்கே வாயேன்

தன்னைத்தான் என்பது போல், ஒரு ஆறு வயது பெண்குட்டி துள்ளி ஓடிவந்தது. பின்பு அவன் நின்ற கோலத்தை பார்த்துப் பயந்து மம்மீ என்று முச்சு விடாமலே கத்தியபடி, அந்த அறையை விட்டு ஓடி, முன்று நிமிடங்களில் அம்மாவின் முதுகைத் தள்ளியபடியே உள்ளே துழைந்தது. கணவனை கண்ட தமயந்தி, மகளை அவசர அவசரமாக வெளியே தள்ளி, அந்தச் சாக்கில், அவனுக்கு முதுகை காட்டிய படியே கத்தினாள்.

என்ன கண்றாவி இதெல்லாம்.

ச. 6.