பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சமுத்திரக் கதைகள்


‘கால் நுழையமாட்டேங்குது தமயந்தி

“தலையணை உறைக்குள்ளே எப்படி கால் நுழையும்? அதோ மேஜையிலதான், பேண்ட், சட்டை, பனியன், அன்டிரயார்னு ஒன்று மேல ஒன்றாய் அடுக்கி வச்சிருக்கேனே... எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே?”

“அயம் ஸாரிமர்”

‘ஸாரிய கட்டாம, பேண்டை போடுங்க

ஒரு ஐந்து நிமிட அனுமானத்திற்கு பிறகு, தமயந்தி உடலோடு சேர்த்து அவன் பக்கமாய் முகம் திருப்பினாள். அப்போது, அவன், பேண்ட் குழாய்களுக்குள் கால்களை தாறுமாறாக நுழைத்துக் கொண்டிருந்தான். அதன் முன்பக்கத்தை பின்பக்கமாக்கி கால்களை விடப்போனபோது, அவள் சிரித்தாள். பின்னர் அவனது பின்பக்கமாய் போய், தனது முன்பக்கத்தை, அவன் மீது சாய்த்துக்கொண்டே, அவன் பிடித்த பேண்ட்டை திருப்பி பிடித்து சரி இப்ப காலை விடுங்க என்றாள். ஆழம் தெரியாமல் காலை விடுவது போல் அவன் அல்லாடியபோது, அவளுக்கு பொம்மலாட்டமே நினைவுக்கு வந்தது. அதனால் என்னவோ அவள் பொம்மலாட்டக்காரியானாள். அவனுக்கு ஆடை போட்டு அழகு காட்டி உபதேசித்தாள்.

‘இதோ பாருங்க... இது பிளட் பிரசர் மருந்து... இது டயாபட்டீஸ் மருந்து, இது சயனசுக்கு... இது இருதயத்துக்கு... அது பல்வலிக்கு... இந்த இரண்டும் காலையில... அந்த இரண்டும் மத்தியானம். இந்த டியூப் மருந்து ஸ்பான்டிலிட்டிக்கு. கழுத்துலயும், தோளுலயும் மட்டுந்தான் தடவணும். போன தடவ மாதிரி விழுங்க்கிட்டு கத்தாதிங்க.’

தமோதரன், அவள் காட்டிய விதவிதமான மாத்திரைகளை விதவிதமாய் நெளிந்து பார்த்தான். ஒன்றுமே புரியாமல், அவன் முகமே முட்டையானது. ஆனாலும் அவள் அந்த முட்டையை அடைகாத்து வெளியே கொண்டுவந்தாள்.