பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமர மேதை

71


தமயந்தியின் முகம் சுண்டியது. பாதி பட்டன்களை மாட்டாமலே, மூத்தாரை ஏறிட்டுப் பார்த்தாள். ஏறிப்போன கோபத்தை இறங்க வைப்பதுபோல், முகத்தை இறக்கினாள். ஒரு கோமாளிக்கு என்ன கட்டி வைச்சிட்டிங்க என்று கோபம் கோபமாய் கேட்கப் போனாள். கல்லூரிக் காலத்தில், தன்னைச் சுற்றி சுற்றி வந்த சில இளவட்டங்களை கூட நினைத்துப் பார்த்தாள். நினைக்க நினைக்க, தன் மேலே, ஒரு அருவெறுப்பு ஏற்பட்டது. இந்த குழந்தையைப் பற்றி தப்பாக நினைப்பதோ இதன் சாக்கில் தப்பான எண்ணங்களை ஊடுருவ விடுவதோ பெற்ற குழந்தையையே கொல்வது மாதிரி, இதை மூத்தார் சொல்லி இருக்கமாட்டார்... இவரோட பெண்டாட்டியும் மாமனார் மாமியாரும் தெரிவித்த கருத்துக்களை சொந்த கருத்தா சொல்கிறார். இதுல, கூட இவர் டுப்ளிக்கேட் தான். ஆனாலும் சூடா ஒன்ணு சொல்லி வைக்கணும்.

‘எருதுக்கு நோவு... காக்கைக்கு கொண்டாட்டம் என்கிற மாதிரி பேசாதிங்க அத்தான்

மூத்தார் திடுக்கிட்டுப் போனார். அவளைச் சமாதானம் செய்வதற்கு வார்த்தைகள் கிடைத்தாலும் வாய் ஒத்துழைக்க வில்லை. பேச்சை மாற்றுவதற்காக ஒரு விவரம் சொன்னார்

“6χυπff). தமயந்தி! என்னால இவனோட போக முடியாது. ரயில் சிநேகிதம் இல்ல... ரயில் வரைக்குந்தான் சிநேகிதம்... ஏன் அப்படி முழிக்கே...?

என்னத்தான் நீங்க? இவர கோழிக்கோட்டில் கொண்டுபோய் கூட்டி வருவதற்காகவே அந்த பக்கமாம் டுர் போட்டிருக்கிறதாய் சொன்னிங்க

‘இப்பவும் இல்லங்கல... ஆனால் எங்க அமைச்சர் டில்லியில் இருந்து நாளைக்கு வரதா மத்தியானம் தான் டெலக்ஸ் வந்தது. நான் ஆபீஸ் ஹெட் என்கிற முறையில இல்லாட்டால் என் தலை தானே உருளும்.'