பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமர மேதை

73


சொல்லுக்குச் சொல் கணவனை அவர் அவர் என்று அடையாளப்படுத்தும் மைத்துணி, இப்போது உங்க தம்பி உங்க தம்பி என்று குத்திக் காட்டுவதை புரிந்து கொண்டவர் போல், அண்ணன்காரர், பதிலுக்கு ஒரு புலி உருமலையே பதிலாக்கிவிட்டு ஆத்திரத்தை காரின் ஆக்ஸிலேட்டரில் காட்டினார். எதுவுமே நடக்காதது போல், இடித்த புளியாய் இருந்த தம்பியைப் பார்த்ததும், மைத்துணியிடம், தான் அப்படி கமென்ட் அடித்திருக்க கூடாது என்றும், ஒரு பின் யோசனை. அவள் மீது ஒரு சின்ன அனுதாபம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆறாவது பிளாட்பாரத்தில் மங்களுர் மெயில், அந்த இளம் இரவில் மங்கிப்போன வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டாத தொலைவு வரை நீண்டு நின்றது. அண்ணனும் தம்பியும் வெளியே எதையும் காட்டாமல் பச்சைச் சாளரக் கண்ணாடிகளை முகமுடியாய் கொண்ட ஒரு பெட்டியில் ஏறினார்கள். இப்படிச் சொல்வது கூட தவறு. பெட்டிப் படுக்கைகளை ரயில் தளத்தில் வைத்துவிட்டு ஏறிய அண்ணன், தம்பியின் கையைப்பிடித்து ஏற்றினார். இருவரும் வெள்ளைக் கண்ணாடி தள்ளுக் கதவை தள்ளிக் கொண்டே, ராஜபாட்டை மாதிரியான பாதையில் நடந்தார்கள். இடது பக்கம், வசதியான மருத்துவ மனைகளில் இருக்குமே தீவிர சிகிச்சைப்பிரிவு, அது மாதிரியான குளிர் சாதன படுக்கைகள். வலது பக்கம் புறநோயாளிகளுக்கு அதே மாதிரியான நீளம் குறைந்த மெத்தைப் படுக்கைகள். இவை இரண்டிற்கும் இடையே சென்றவர்கள், இந்த பெட்டியின் இராணித்தேனி உறைவிடம் போல் இருந்த, முதலாவது வகுப்பு குளிர் சாதன பகுதிக்கு வந்தார்கள். வெல்வெட் தரை... தொட்டால் சிணுங்கி செடியின் இலை போன்ற மெத்தைப் படுக்கைகள்.

அண்ணன், அந்த ரயில் பெட்டியின் நுழைவாசலுக்கு வெளியே நின்று கொண்டே பெட்டி படுக்கைகளை கிழ்த்தள இருக்கையின் அடிவாரத்தில் திணித்தார், பின்னர், தம்பியை உள்ளே தள்ளிவிட்ட படியே, இதுதான் உன் சிட்டுடா... லோயர் பெர்த் என்றார். சிறிது நேரம் நின்றார். பிறகு புறப்பட்டார். அவருக்கு அவசரமில்லைதான். மீண்டும் யோசித்தபோது மைத்துணி சொன்னது திரடலாகப் பட்டது. அவள் இடத்தில்