பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமர மேதை

77


ஏறினான். முழுவதும் மலையாள எழுத்து. கோழிக்கோடா என்று கேட்டபோது, அதுதான் என்றான் ஒரு தமிழன். அவசரஅவசரமாக சொல்லிவிட்டு, அவன் போய்விட்டான். இருபது கிலோ மீட்டரில், அது கோழிக்கோட்டுக்கு எதிர் பாதையில் செல்லும் பேருந்து என்பதை ஒரு மலையாளி அனுதாபத்தோடு சொன்னார். இடையில் பேருந்தில் இருந்து இரக்கப்பட்டு, கோழிக்கோடுக்கு எதிர்புற பேருந்தில் போனால், அந்த பேருக்குரிய பல்கலைக்கழகம் கோழிக்கோட்டில் இல்லையாம். அங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில், தேனிப் பாலம் என்ற இடத்தில் இருக்கிறதாம். நான்கைந்து தமிழ்ப் பையன்கள் தாமோதரனை, சரக்குப்பொதி போல், கோழிகோட்டிலிருந்து தேனிப் பாலம் வழியாக ஏதோ ஒரு இடத்திற்கு செல்லும் ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார்கள்.

எப்படியோ கோழிக்கோடு பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் அவனுக்காகவே காத்திருந்த துறைத்தலைவரும், உடலி யல் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் அவனை பார்த்ததும் ஆனந்தமானார்கள். துறைத்தலைவர் படப்படப்பாய் கேட்டார்.

‘ரயில் நிலையத்திலேயே காரை நிறுத்தி டிரைவர் கையில ஒரு போர்டையும் கொடுத்தோமே? சரி போகட்டும்... முதல்ல உங்க ஒய்புக்கு டெலிபோன் செய்யுங்க... ஏழெட்டு தடவ டெலிபோன் செய்திட்டாங்க. கடைசியா அழுதுட்டாங்க... வந்த உடனே ஒங்கள, பேசச்சொன்னாங்க. இதோ டெலிபோன்... எதற்காக தலையை சொறியுறிங்க.’

என் வீட்டு டெலிபோன் நம்பர்ல ஒரு சந்தேகம். 491948 நோ நோ 481871 இதுவும் இல்ல 489... உங்களுக்கு தெரியுமோ? மெட்ராஸ்ல திருவான்மீயூர் முதல் மூணு நம்பர் தெரிந்தா புடிச்சுக்குவேன்.

‘சரி... மேடமே பேசுவாங்க. இந்தாப்பா... பிரட் ஆம்லெட் கொண்டுவா.”

தாமோதரன், தலைதாங்கும் சோபா இருக்கையில் பொத்தென்று விழுந்தான். தலையை அங்குமிங்கும் உருட்டினான்.