பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சமுத்திரக் கதைகள்


வயிற்றை கைகளால் பிசைந்தான். கண்கள் சொருகின. வாய் கோணியது ஒரே பதட்டம். அவனுக்கல்ல... அங்கே இருந்தவர்களுக்கு.

‘என்ன சார் என்ன சார் ஆச்சு.’

‘தலை சுத்துது... வயித்து பக்கம் ஒரே வலி. ஒரு வேளை... பி.பி கூடிட்டோ என்னவோ... சுகர் அதிகமாயிருக்குன்னு நினைக்கிறேன்.’

அடக்கடவுளே! பிள்ளையார் பிடிக்க குரங்காய் போவுதே. ஒ,கே... யுனிவர்சிட்டி டாக்டர முதலுதவி சிகிச்சைக்கு கூப்பிடுப்பா. காலிக்கட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக ஆம்புலன்ஸை ரெடிபண்ணுங்கப்பா.’

அந்த விருந்தினர் மாளிகையே பரப்பரப்பானபோது, ஒரு சேவகன் ஒரு தட்டில் வெள்ளைத்துணி உப்ப அந்த அறைக்குள் வந்து, அந்த தட்டின் முக்காட்டை விலக்கினார். ஐந்தாறு பிரட்டுகள்... இடை இடையே ஆம்லெட் துண்டுகளோடு மேல் வாக்கில் இரட்டை இரட்டையாக அடுக்கப்பட்டிருந்தன. தாமோதரன் அவசர அவசரமாக அவற்றை பிய்த்து பிய்த்து வாய்க்குள் போட்டான். ஒரு ஜக் தண்ணிரை கண்ணாடி தம்பளில் ஊற்றாமல் அப்படியே குடித்தான். பிறகு ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னான்.

‘இப்போ மயக்கம் இல்ல. தலை சுத்தல... வயிறும் வலிக்கல... நான் என்ன நினக்கேன்னா பசியிலதான் அப்படி தல சுத்தி இருக்குமோன்னு’

‘இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார். உடலியல விட, உயிரியல் தான் முக்கியம் சார். அப்புறம் மேடம் தமயந்திக்கு எங்களால பதில் சொல்ல முடியாது.’

‘அப்படின்னா யாரு ?

‘உங்க ஒய்ப் சார்.’

‘ஐ.சி... செமினாருக்கு போலாமா?