பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலந்தி வலை

83


காவலர்களை சரிபார்த்து, ரோல்கால் எடுத்தானாம். ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை காவலர்களுக்கு பாடம் நடத்தினானாம். சாதிக் கலவரங்களை, சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக அணுக வேண்டுமா அல்லது சமூகக் காரணிகளாகக் கருதி, நீக்குப் போக்காக நடக்க வேண்டுமா என்பது அவன் எடுத்த பாடமாம். பாடத்திற்குப் பிறகு, சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி காவலர்களை தெளிவடைய வைத்தானாம்.

சாமிநாதன், பொதுநாள் குறிப்பேட்டில், இப்படியாக எழுத வேண்டியவற்றை எழுதி முடித்து விட்டு, வழக்குக் குறிப்பேட்டைத் திறந்தான். பிரேத பரிசோதனை, விபத்து விசாரணை, கோர்ட் வழக்கு, ரிமாண்ட் கைதிகள், காணாமல் போனவர்களின் கண்டுபிடிப்புகள், பிட் பாக்கெட், புலன்விசாரணை போன்ற பணிகளுக்கு நியமித்திருக்கும் காவலர் பெயர்களை எழுதி வைத்துவிட்டு, தனக்கு எந்த டுட்டியை ஒதுக்கலாம் என்று தலையைக் குடைந்தபோது

காக்கிச் சட்டையில் சாம்பல் நிற இரட்டை வெள்ளைப் பட்டைகளைக் கொண்ட ஒரு காவலர், இளைஞன் ஒருவனை அவன் தலைமுடியை முன்பக்க குடுமிக் கைராக்கி, மாடுபோல இழுத்துக்கொண்டு வந்து, சாமிநாதன் பக்கமாய் குப்புறத் தள்ளியபடியே, நேரடி வர்ணனை கொடுத்தார். -

வேன்களில் பயணிகளை ஏற்றக்கூடாதுன்னு தடை வந்திருக்கு. இவன் என்னடான்னா... ஒவர் லோடா ஏத்திக்கிட்டிருக்கான். ஸ்டேஷனுக்கு வாடான்னு கூப்பிட்டால், என்ன விஷயமுன்னு வேன் சீட்ல இருந்து இறங்காமலே தெனாவட்டாய் கேட்கறான் ஸார்... இந்த நாயை முட்டிக்கி முட்டி வாங்கனும் ஸார்... ஒரு வருடத்துக்கு இவன் வேனை முடக்கிப் போட்டு, காய்லாங் கடைக்கு அனுப்பும்படி செய்யனும் ஸார்...”

சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும் கறிக்கோழி போல, கூனிக் குறுகியும் சிலிர்த்தும் நின்றான் வேன் டிரைவர். சாமிநாதன்,

ச. 7.