பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

சமுத்திரக் கதைகள்


இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, எதையோ யோசிப்பதுபோல் ஆள்காட்டி விரலால் நெற்றிப்பொட்டை மூன்றுதடவை தட்டிவிட்டு, வாய் மலர்ந்தான்.

“சரி... நீங்க, ரிமாண்ட் கைதிகளை கூட்டிக்கிட்டு கோர்ட்டுக்குப் போங்க. இவனை நான் கவனிச்சுக்கிறேன்.”

இளைஞனை மாடாக்கிய அந்தக் காவலர், உள்ளங்கையில் நமச்சல் ஏற்பட்டும் பலனில்லாமல் போனதை பற்கடியாய் வெளிப்படுத்திய படியே, லாக்கப் அறைக்குப் போனார். சாமிநாதன், பெருமாளை ஒரக்கண் போட்டுப் பார்த்து முடித்துவிட்டு, வேன் டிரைவரிடம் அமைதியாகக் கேட்டான்.

“எந்த டிராவல்ஸ்டா...?”

“நித்தியா டிராவல்ஸ் ஸார்... நான் முதலாளிகிட்ட எவ்வளவோ சொன்னேன் ஸார். வேன்ல ஷார்ட் டிரிப் அடிக்கக்கூடாதுன்னு பலதடவைச் சொன்னேன் ஸ்ார். அவர்தான் “நானிருக்கேன் பயப்படாதேன்னு சொன்னார் ஸார்...”

“போகட்டும். உன் கம்பெனியில எத்தனை டுரிஸ்ட் வண்டிங்க இருக்குதுடா....?”

“ஏ.சி. அம்பாசிடர் எட்டு... ஏ.சி. டாடா சுமோ ஒன்பது... மகேந்திரா ஆறு... அப்புறம், ஏ.சி. இல்லாத முப்பது வண்டிகள் இருக்கு ஸார்...”

“சரி... லைசென்சை எடு...”

‘முதலாளி, என் லைசென்சை வாங்கி டேங்கர் லாரிக்காரங்கிட்ட கொடுத்துட்டார் ஸார். அவனுக்கு லைசென்சு கிடையாது... சரியா ஒட்டவும் வராது... மூணு பேரைக் கொன்னுட்டான். அதுக்காக, என் லைசென்சை அவன் லைசென்சா காட்டியிருக்கு...”

“ஒன் போட்டோவை வச்சு கண்டுபிடித்திடலாமே...?”

“எங்க முதலாளி இந்திரஜித் ஸார்... சமாளிச்சுக்குவார்..."